கங்குவா பட ரிலீஸற்கு தொடரும் பிரச்சனை!! மழையால் பாதிப்பு வருமா?

Kanguva Release : கங்குவா திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதியான நாளை வெளியாக இருப்பதை ஒட்டி, இந்த ரிலீஸிற்கு மழையினால் பிரச்சனை வருமா என்பது குறித்த சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 13, 2024, 06:08 PM IST
  • கங்குவா திரைப்படத்திற்கு தொடரும் தடைகள்
  • மழை வேற வரப்போகுது
  • படம் என்ன ஆகும்?
கங்குவா பட ரிலீஸற்கு தொடரும் பிரச்சனை!! மழையால் பாதிப்பு வருமா?  title=

Kanguva Release : சூர்யா நடிப்பில் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடுத்த படத்தின் ரிலீசுக்கு ஆரம்பத்திலேயே எக்கச்சக்க தடைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது மழையும் ஒரு தடையாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. 

கங்குவா திரைப்படம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், சூர்யா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பிறகு இவர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வெளியாக்கின. ஹீரோவாக நடித்த ஜெய் பீம் படமும் ஓடிடியிலேயே வெளியானது. பெரிய இடைவெளிக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் சூர்யாவின் படம் கங்குவா. 

முதல் தடை..!

காங்குவா படத்தின் க்ளிம்ஸ் காட்சிகள் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து கடந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதியே கங்குவா படம் வெளியாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் படம் வெளியானது. ரஜினி படத்துடன் போட்டியிட அனைத்து நட்சத்திரங்களும் யோசிப்பர். அப்படி பொறுமையாக யோசித்த சூர்யாவும் கங்குவா பட தயாரிப்பாளர்களும், படத்தை வேறு ஒரு தேதியில் வெளியிட முடிவு செய்தனர். 

நீதிமன்றத்தில் வழக்கு..

கங்குவா படம், ரிலீஸிற்கு ஆயத்தமானதை தொடர்ந்து, யாரும் எதிர்பார்க்காத இன்னொரு அம்பு பாய்ந்தது. அதுதான், நீதிமன்ற வழக்கு. சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் உள்பட 3 திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ப்யூயல் டெக்ட்னாலஜி என்ற நிறுவனத்திடம் 6 கோடிய 60 லட்ச ரூபாய்க்கு கொடுத்திருந்தது. 

இந்த ஒப்பந்தப்படி, 2 படங்கள் இந்தியில் தயாரிக்கப்படவில்லை. இதையடுத்து, 5 கோடி ரூபாயை ப்யூயல் நிறுவனத்திடம் கொடுத்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், மிதம் 1 கோடிய 60 லட்ச ரூபாயை திரும்ப வழங்கவில்லை. இதை வட்டியுடன் சேர்த்து ரூ.11 கோடியாக திரும்பி வழங்காமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கின் முடிவு இன்று வெளியானது. அதில், ப்யூயல் டெக்னாலஜி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டது. தொகை டெபாசிட் செய்யப்பட்டதை தொடர்ந்து, திட்டமிட்டபடி நவம்பர் 14ஆம் தேதி கங்குவா படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மழை பாதகமாக அமையுமா? 

கங்குவா படத்தின் ரிலீஸிற்கு அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது மழையும் பெரிய பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சொன்னது போல, அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்து வருகிறது. நாளையும் இதே நிலை தொடர்ந்தால் கங்குவா படத்தை மக்கள் வந்து பார்ப்பது கடினமாக அமையலாம். 

இன்னொரு பிரச்சனை!!

தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வார இறுதி நாட்களில் இப்படத்தை பார்க்க மக்கள் கூடுவதால், இதை விடுத்து அதிக ஸ்கிரீன்களை கங்குவா படத்திற்கு கொடுக்க, சில தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படியே சென்றால் கங்குவா படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்க | ‘‘கங்குவா படத்தைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள்’’- சூர்யா

மேலும் படிக்க | “கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News