Manjummel Boys Actor In Coolie Movie : ரஜினிகாந்துடன் முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைக்கோர்த்திருக்கும் படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாெடங்கியதை தொடர்ந்து இதில் நடிக்க இருப்பவர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூலி திரைப்படம்:


வெகு சில திரைப்படங்களையே இயக்கி இருந்தாலும், அதற்குள் டாப் இயக்குநர்களின் லிஸ்டில் சேர்ந்துவிட்ட டைரக்டர், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இருந்த ஆரம்பித்த இவரது சினிமா பயணம் இன்று ரஜினிகாந்துடன் கூலி படத்தில் வந்து நிற்கிறது. இடையில் நடிகர் விஜய்யை வைத்து மட்டும் மாஸ்டர்-லியோ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் திரையுலகில் ‘எல்.சி.யூ’ எனும் புது கான்செப்டையும் கொண்டு வந்ததால் இவர் படம் எப்படியிருந்தாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விடுகின்றனர். அந்த வகையில், கூலி படத்தின் மீதும் பலருக்கும் பல்வேறு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது. 


கூலி படத்தின் டைட்டில் டீசரில் ரஜினிகாந்தின் லுக்கும், அவரது கதாப்பாத்திர தாேற்றமும் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு படத்தின் லுக் டெஸ்ட் முடிந்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் லோகி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இம்மாதத்தின் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையிலும் படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 


ரஜினியுடன் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர்:


தமிழ் நாட்டில் எப்போதுமே மலையாள படங்களை ரசிப்பவர்கள் இருக்கின்றனர். அதிலும், இந்த வருடம் வெளியான பல்வேறு மலையாள படங்கள் கேரளா மட்டுமன்றி தமிழகத்திலும் பெரிய வசூல் சாதனையை பெற்றது. அப்படி மக்களை அதிகம் கவர்ந்த படங்களுள் ஒன்று, மஞ்சுமெல் பாய்ஸ். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கியிருந்தார். பாதி தமிழிலும் பாதி மலையாளத்திலும் உருவாகியருந்த இந்த படம் ஹிட் அடிக்க முக்கிய காரணம், படத்தின் கடைசி 20 நிமிட வேகமான திரைக்கதையும், குணா படத்தில் இடம் பெற்றிருந்த ‘கண்மணி அன்போடு காதலன்..’ பாடலும்தான் என கூறப்பட்டது. 


மேலும் படிக்க | ரஜினிக்கு கூலி படத்திற்கு வேட்டு வைத்த இளையராஜா.. ஷாக்கில் ரசிகர்கள்


ஹீரோயினே இல்லாத இந்த படத்தில், கொடைக்காணலுக்கு டூர் சென்று அங்கு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் குழுதான் நாயகர்களாக நடித்திருந்தனர். அதிலும், குகைக்குள் தவறி விழும் ஸ்ரீநாத் பஸ்ஸியும், அவருடைய நெருங்கிய நண்பராக வரும் சௌபின் சாகிரும்தான் படத்தில் அதிக ஸ்கிரீன் டைம் கொண்டவர்களாக இருந்தனர். இதில், சிஜு டேவிட் (குட்டேட்டன்) கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சௌபின் சாகிர், தற்போது ரஜினிகாந்துடன் கூலி படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் அவருக்கு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 



ரஜினிக்கு மகளாக இவரா?


கூலி படத்தில் இன்னொரு பெரிய நடிகரும் வாரிசு நடிகையும் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்தான். கூலி படத்தில் இவர் ரஜினிகாந்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Thalaivar 171 Title : தலைவர் 171 படத்தின் பெயர் ‘கூலி’! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ