ரஜினியின் கூலி படத்திற்கு 60 கோடி சம்பளம் வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ்!

Coolie Movie: ரஜினியின் 171வது படமான கூலி படத்தின் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

1 /5

5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். விக்ரம், லியோ என தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.   

2 /5

லியோ உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை ஆரம்பித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார்.   

3 /5

லியோ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

4 /5

ரஜினியின் கூலி படத்தை இயக்க லோகேஷ் 60 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு, லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.  

5 /5

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் உள்ளார். அனிருத் இசையமைக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.