Latest News Premgi Amaren : தமிழ் திரையுலகில், காமெடி நடிகராக வளம் வந்தவர் பிரேம்ஜி. கங்கை அமரனின் மகனான இவர், தனது தந்தை மற்றும் அண்ணன் வெங்கட் பிரபுவை தொடர்ந்து திரை உலகிற்குள் நுழைந்தார். 2000 காலங்களில் வெளிவந்த பல படங்களில் ராப் பாடல்கள் பாடியிருக்கிறார். 1997 ஆம் ஆண்டில் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த இவரை பிரபலப்படுத்திய பாடல், லூசு பெண்ணே. சில நாட்கள், தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த இவர், யுவன் இசையமைத்த வல்லவன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்கட் பிரபு முதன் முதலாக இயக்கியிருந்த சென்னை 600028 படத்தில் பிரேம்ஜி (Premgi Amaren) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தன் சகோதரன் இயக்கிய சரோஜா, மங்காத்தா, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 


இதனிடையே இவர் திருமண வயதை கடந்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராக இருந்த வந்த இவர் கடந்த 9 ஆம் தேதி, 2024 ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் போன்ற பிரேம்ஜியின் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 


மேலும் படிக்க | Latest News Indraja Shankar: குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா! “அதுக்குள்ளையா” ரசிகர்கள் ரியாக்‌ஷன்!


பிரேம்ஜியின் திருமண செய்தி வந்தவுடன் அனைவரும் அது ஏதேனும் படத்திற்கான பிரமோஷன் ஆக இருக்கும் என்று நினைத்தனர். இந்த தகவல் உண்மைதான் என வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட பிறகுதான் பலர் நம்பினர். இவருக்கும் இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட பெண், அவரது உறவினர் என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது பிரேம்ஜிக்கு திருமணம் நடந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தாலி பிரித்துக் கோர்க்கும் விஷேசம் தற்போது பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அப்போது எடுத்தப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பிரேம்ஜியின் மனைவி இந்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர், 


முருகப்பெருமானால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம் என்றும் அன்பு, விசுவாசம் மற்றும் இறைவனின் பாதுகாப்போடு, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



இதனிடையே 40 களை கடந்தும் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கும் திரை பிரபலங்களில் ஒருவராக இருந்தார் பிரேம்ஜி. இவருக்கு திருமணம் ஆனபோது வயது 45. தன்னைவிட சிறிய வயது உடையவர்களை திருமணம் செய்து கொள்வது சகஜம் என்றாலும், பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் பலரையும் மலைக்க வைத்துள்ளது. நடிகர் பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்ட இந்துவிற்கு தற்போது வயது 25தான் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Bigg Boss 8 Tamil New Host Replacing Kamal Haasan : பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ