குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா! “அதுக்குள்ளையா” ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

Latest News Indraja Shankar : ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், சமீபத்தில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் குட் நியூஸை தெரிவித்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 9, 2024, 01:54 PM IST
  • இந்திரஜாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
  • குட் நியூஸை பகிர்ந்திருக்கிறார்
  • ரசிகர்கள் அதிர்ச்சி
குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா! “அதுக்குள்ளையா” ரசிகர்கள் ரியாக்‌ஷன்! title=

Latest News Indraja Shankar : பிரபல காமெடி நடிகராக இருக்கும் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா சங்கர். இவருக்கும், அவரது மாமாவிற்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், அவர் அனைவருக்கும் ஒரு குட் நியூஸை கூறியிருக்கிறார். 

இந்திரஜா சங்கரின் திருமணம்…

சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வந்த ரோபோ சங்கர், இப்போது பெரிய திரையிலும் வளரும் நட்சத்திரமாக வலம் வருகிறார். இவருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவரும், அவரது தாயின் தம்பி கார்த்திக்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைப்பெற்றது. 

திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருந்து மெஹந்தி, ஹல்தி, சங்கீத், திருமணம் வரை அனைத்தையும் ஒரு பிரபல ஊடக நிறுவனம் நடத்தி, வீடியோ கவரேஜ் செய்தது. மகளுக்கு தடபுடலாக திருமணம் செய்து வைத்த ரோபோ சங்கர் பின்பு அவர்களை வைத்து ரீல்ஸ் செய்து வந்தார். 

Mr. and Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்திரஜா…

இந்திரஜா சங்கரும், அவரது கணவர் கார்த்திக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr. and Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக இருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பிருந்தே, இருவரும் வீடியோ போட்டு டிரெண்ட் ஆக ஆரம்பித்தனர். இந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களாகவும் இருவரும் இருக்கின்றனர். 

குட் நியூஸ்!

Mr. and Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் ப்ரமோ சமீபத்தில் வெளியானது. அதில், இந்திரஜா சங்கரின் கணவர் கார்த்திக், தான் விரைவில் தந்தையாக இருப்பதாகவும், தனது மனைவி தாயாக இருப்பதாகவும் தெரிவித்தார். அது மட்டுமன்றி, இவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு வீடு கிடைத்தது. இதனை, வேறு ஒரு ஜோடிக்கு அளிப்பதாக பேசியிருந்தனர். இதையடுத்து, இந்திரஜாவிற்கு நலங்கு வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மாமியாருக்கு லிப் கிஸ் கொடுத்த மருமகன்! இந்திரஜா சங்கர் திருமணத்தில் நடந்த கூத்து..

ரோபோ சங்கர் பேசியது..

இந்திரஜா குறித்த இந்த குட் நியூஸ் வந்த பிறகு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ராதா முதற்கொண்டு அனைவரும் கண் கலங்கினர். இதையடுத்து பேசிய ரோபோ சங்கர், இங்கு இருப்பதிலேயே யங் ஆன தாத்தா தான்தான் என்றும் கூறினார். இந்திரஜாவிற்கு நலங்கு வைத்த அனைவரும் அவரை வாழ்த்தி ஆசிர்வாதமும் செய்தனர். 

இளம் வயதிலேயே திருமணம் செய்த இந்திரஜா..

இந்திரஜா சங்கர், முதன் முதலில் ‘பிகில்’ படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு வெளியான ‘விருமன்’ திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிதி சங்கருக்கு தோழியாக நடித்திருந்தார். இதுவும் அவருக்கு புகழை தேடி கொடுத்தது. சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், அடுத்து திருமண வாழ்க்கையில் நுழைந்தார். இவருக்கு வயது, தற்போது 22 ஆகிறது. ஒரு சிலர் இவர் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக கூற, இது சரியான வயதுதான் என்று இன்னொரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்திரஜாவின் புதிய தொடக்கத்திற்கு அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு சிலர்,  “அதுக்குள்ளையே குழந்தையா?” என்று ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Indraja Shankar : புதிதாக திருமணம் ஆன இந்திரஜா சங்கருக்கு நடிகர் சூரி கொடுத்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News