Latest News Raayan OTT Release : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், தனுஷ். தமிழ் மொழி மட்டுமன்றி, இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் இவர், ஒரு கட்டத்தில் ஹாலிவுட் வரை சென்று விட்டார். இந்த சமயத்தில், அவர் நடித்த திரைப்படம்தான் ராயன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயன் திரைப்படம்:


தனுஷ் நடிப்பில், கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியான படம் ராயன். இந்த படத்தை, அவரே எழுதி-இயக்கி, நடித்து இருக்கிறார். ராயன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் எஸ்.ஜே.சூர்யா, செல்வரகாவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும் இதே போல முக்கிய கதாப்பாத்திரங்களில் செல் முருகன், பிரகாஷ் ராஜ், சரவணன், வரலக்‌ஷ்மி சரத்குமார், திலீபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.


மக்கள் வரவேற்பு:


ராயன் படம், நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமாகும். ஏற்கனவே, அவர் இயக்கிய பா.பாண்டி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து, இந்த படமும் நன்றாக இருப்பதாக மக்கள் தங்களது கருத்துகளை கூறியிருக்கின்றனர். மேலும், படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக இருப்பதாகவும் சிலர் கூறியிருக்கின்றனர். கேங்ஸ்டர் த்ரில்லரான இந்த திரைப்படம், சமீபத்தில் வெளியான படங்களில் மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்ற படம், இதுவாகும். 


மேலும் படிக்க | OTT Movies : ஒரே நாளில் அசத்தலான ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?


ஓடிடியில் ரிலீஸ்..


இந்தியாவில் ஓடிடி தளங்களில் வருகை அதிகரித்துள்ளதால், தியேட்டர்களில் வெளியாகும் படங்களும், விரைவில் ஓடிடியில் வெளியாகி விடுகிறது. அந்த வகையில், தற்போது ராயன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, ராயன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் 23ஆம் தேதி முதல் ஓடிடியில் பார்க்கலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


தனுஷ், தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் குமாலா இயக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் தயாராகிறது. இது மட்டுமன்றி, தனுஷ் “நிலவுக்கு என் மேல் என்னடி காேபம்” படத்தையும் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் இளம் வயது கதாநாயகர்களை நடிக்க வைக்கும் அவர், இதில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ