Seetha Payanam First Look Arjun Aishwarya Arjun Movie : அனைவரும் கொண்டாடி மகிழும், தீபாவளி நன்நாளில், மேலும் இனிமை சேர்க்கும் விதமாக,  குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த  போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது.  மகிழ்ச்சியான ஒரு இனிய பயணத்தை உறுதி செய்கிறது, இந்த போஸ்டர். 


பிரபல நட்சத்திர நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா  தயாரித்து, இயக்கும் “சீதா பயணம்” திரைப்படம், இதயம் நெகிழும் தருணங்கள் மற்றும் உலகளாவிய  பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்களை ஒன்றாக இணைத்து, ஒரு அருமையான  குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.  முன்னணி பிரபலங்களான சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது, கதைக்கு கூடுதல் ஈர்ப்பைக் கொண்டு வந்துள்ளது. 


நடிகை ஐஸ்வர்யா இத்திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அவரது வசீகரிக்கும் அழகு, ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்திழுக்கிறது.  இந்தத் திரைப்படத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இப்படம் ஒரு இனிமையான காட்சி  அனுபவத்தைத் தரும். 


இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படம் தெலுங்கு - தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. 


மேலும் படிக்க | அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண புடவை ரகசியம்! இதில் இப்படியொரு கதையா?


ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம்:


நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, முதலில் நடித்த தமிழ் படம் பட்டத்து யானை. இந்த படத்திற்கு பிறகு, அவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தெலுங்கில் மட்டும் ஒரே ஒரு படத்தில் நடித்தார். திரையுலகில் இருந்து விலகியிருந்த இவர், சமீபத்தில் திருமணம் முடித்தார். குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, திருமணம் முடித்த சில மாதங்களில் இவர் படங்களில் நடிக்க இறங்கியிருக்கிறார். இதற்கு இவரது கணவரும் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


உமாபதியும் ஐஸ்வர்யாவும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர்ஸ் ஷோவில் சந்தித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மிகவும் நட்புடன் பழகிய இவர்கள், பின்னர் காதலிக்க தொடங்கியதாகவும் அப்படியே வளர்ந்த இவர்களின் காதல் சில மாதங்களுக்கு முன்பு திருமணத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மீண்டும் கம்-பேக் கொடுக்க இருக்கும் ஐஸ்வர்யாவை திரையில் பார்ப்பதற்கு பலர் காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ