Latest News Spider Man 4 : இந்தியாவில், ஹாலிவுட் படங்களை பார்ப்பதற்கென்று ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. அதிலும், மார்வல் யுனிவர்ஸ் படங்களுக்கு இங்கு மவுசு அதிகம். அப்படி, மார்வல படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்:


மார்வல் ஹீரோக்களுள் மிகவும் முக்கியமானவராக இருப்பவர், ஸ்பைடர் மேன். டோபி மெக்வயர்தான், முதன்முதலில் ஸ்பைடர் மேன் படங்களில் ஹீராேவாக நடித்தார். அதன் பிறகு தி அமேசிங் ஸ்பைடர் மேன் படங்களில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஹீரோவாக நடித்திருந்தார். இதையடுத்து அவெஞ்சர்ஸ் குழுவில் இணைந்தவர்தான், டாம் ஹாலண்ட். பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு ஸ்பைடர் மேன் பவர் கிடைப்பதால் அவனை அவெஞ்சர்ஸ் குழுவிலேயே சேர்த்துக்கொள்வர். அப்படியே ஹீரோவாக வளரும் அவன், அவர்களுடன் சேர்ந்து பல சாகச போர்களில் ஈடுபடுகிறான். 


டாம் ஹாலண்ட், முதன் முதலில் ஸ்பைடர் மேனாக நடித்த ஹோம் கம்மிங் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படமும், 2021ஆம் ஆண்டு, ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படமும் வெளியானது. 


மேலும் படிக்க | GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?


ஸ்பைடர் மேன் படத்தின் 3வது பாகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மல்டி வர்ஸ் கான்செப்ட் உபயோகப்படுத்த பட்டிருந்தது. இதில், பழைய ஸ்பைடர் மேனான டோபி மெக்வையர் மற்றும் ஆன்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். கூடவே, பழைய பாகத்தில் இடம் பெற்றிருந்த வில்லன்களும் வந்திருந்தனர்.


ஸ்பைடர் மேன் 4:


ஸ்பைடர் மேன் படத்தின் நான்காவது பாகம் வெளிவருமா இல்லையா என்ற அறிவிப்பை இன்னும் மார்வல் நிறுவனம் வெளியிடாமலேயே இருக்கிறது. ஆனால், இது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. 


ஹாலிவுட்டில் பிரபல இயக்குநராக விளங்கி வருபவர், டெஸ்டின் டேனியல் க்ரெட்டான். இவர், ஏற்கனவே அவெஞ்சர்ஸ் படங்களில் இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இவரை ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகத்தை இயக்க கூறி, மார்வல் நிறுவனம் பேச்சி வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 


இதற்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இதில், டாம் ஹாலேண்ட்தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் புதிதாக ஸ்பைடர் மேன் போன்ற அதே வில்லன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 



நடிகர்கள் யார்? 


படத்தின் ஹீரோ டாம் ஹோலாண்ட் தவிர, இன்னும் சிலர் படத்தில் இருப்பது குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் இருக்கும் மூன்று படங்களில் நடித்த ஜெண்டயா, ஸ்பைடர் மேன் 4 படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவுக்கு நண்பராக நடித்த ஜேகப் பாட்லானும் இதில் நடிக்கிறார். 3 ஸ்பைடர் மேன் படங்களிலும் எழுத்தாளர்களாக பணிபுரிந்த க்ரிஸ் மெக்கன்னா, எரிக் சாமர்ஸ் ஆகியார் இந்த படத்திற்கும் ஸ்கிரிப்ட் எழுதுகின்றனராம். 


ஸ்பைடர் மேன் 4 படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இப்படம் 2026 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | 4வது கணவரை பிரியும் 55 வயது பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ