Latest News Jennifer Lopez Ben Affleck Divorce : பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர், தனது 4வது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? இங்கு பார்ப்போம்.
Latest News Jennifer Lopez Ben Affleck Divorce : ஹாலிவுட் திரையுலகில், பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெனிஃபர் லோபஸ். இவருக்கு தற்போது 55 வயது ஆகிறது. இவரும் பிரபல நடிகர் பென் ஆஃப்லெக்கும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கை, தற்போது முடிவு பெற உள்ளது. ஜெனிஃபர் லோபஸ், விவாகரத்து கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த விவாகரத்திற்கான காரணம் குறித்தும், இவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்தும் இங்கு பார்ப்போம்.
ஹாலிவுட்டில், பிரபல நட்சத்திர ஜோடியாக சுற்றியவர்கள், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் ஆஃப்ளெக். சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் இருவரும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஜெனிஃபர் லோபஸ், உலகளவில் பிரபலமான நடிகையாகவும், பாடகியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருஇகிறார். pஆப் பாடல்களை பாடி பிரபலமான இவர் ஒரு நடன கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன.
பென் அஃப்லெக் நடிகராகவும், திரைப்பட இயக்குநராகவும் வலம் வருகிறார். இவர் படங்கள் பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளது. பெருமாலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் காமெடி படங்களிலும் நடித்த இவர், நிஜத்தில் கொஞ்சம் சீரியஸான ஆள் என கூறப்படுகிறது.
ஜெனிஃபர் லோபஸ், ஒஜானி நோவா, மார்க் ஆண்டனி, க்ரிஸ் ஜட் உள்ளிட்ட மூன்று பேரை இதுவரை திருமணம் செய்திருக்கிறார். இவரது ஒரு சில திருமண வாழ்க்கை 2 அல்லது 1 ஆண்டுகளில் முடிவு பெற, ஒரு திருமணம் மட்டும் 10 ஆண்டுகள் வரை நீடித்தது. இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பென் ஆஃப்லெக், இதுவரை ஒருவரை மட்டும் திருமணம் செய்திருக்கிறார். அந்த திருமண வாழ்க்கை 12 ஆண்டுகள் வரை நீடித்தது. 2018ஆம் ஆண்டு அதிலிருந்து விவாகரத்து பெற்ற இவர், அடுத்து 2022ஆம் ஆண்டு ஜெனிஃபர் லோபஸை திருமணம் செய்து கொண்டார்.
ஜெனிஃபரும் பென் ஆஃப்லெக்கும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியானது. அது, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
55வயதாகும் ஜெனிஃபர் லோபஸ், தனது 52 வயது கணவர் பென் ஆஃப்லெக்கை விட்டு விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.
பென் ஆஃப்லெக், திருமண வாழ்க்கையில் பெரிதாக ஈடுபாடு காட்டாததுதான் இந்த விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.