Viduthalai Part 2 First Look Update: கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான படம், விடுதலை பாகம் 1. நீண்ட நாட்களால் இரண்டாம் பகத்திற்கான அப்டேட்டிற்காக காத்திருந்த மக்களுக்கு தற்போது விருந்து அளிக்கும் விதமாக படக்குழுவினர் மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடுதலை திரைப்படம்:
தமிழ் சினிமாவின் நம்பக இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர், இயக்குனர் வெற்றிமாறன். ஜன்ரஞ்சகமான கதைகளை மக்களின் மனதில் அழுத்தமாக பதியும் அளவிற்கு இயக்கி தனக்கென தனி அடையாளத்தை அவர் தமிழ் சினிமாவில் பதித்துள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி காவல் அதிகாரியாக நடிக்க இவருக்கு எதிரான கதப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் இரு மொழிகளிலுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.


விடுதலை பாகம் 2: 
விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கடம்பூரில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைப்பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று ஆரம்பித்தது. முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் கிராம மக்களையும் சுற்றி நிகழுவது போல படத்தின் கதையம்சம் இருந்தது. ஆனால், இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்பட உள்ளன. இதன் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. குறிப்பாக சிறுமலை எனும் இடத்தில் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகின்றன. விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் மீதம் இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | 27 வருடங்களுக்கு பிறகு இணைந்த சூர்ய வம்சம் ஜோடி! வைரல் போட்டோஸ்..


விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக்:
இந்நிலையில் தற்போது 'விடுதலை 2' படத்தின் அப்டேட் குறித்த தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை அதாவது ஜூலை 17 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு 'விடுதலை 2 ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. மேலும் இந்த படம் ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பல புது கதாப்பாத்திரங்கள்:
எந்த ஒரு படத்திற்கும் இரண்டாம் பாகம் எடுத்தால் புது கதாப்பாத்திரம் வருவது போல, விடுதலை இரண்டாம் பாகத்திலும் சில புதிய கதாப்பாத்திரங்கள் வரவுள்ளன. அதிலும் முக்கியமாக விஜய் சேதுபதியின் மனைவி கதாப்பாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இதுனால தான் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர்.. இந்தியன் 2 பட்ஜெட் இத்தனை கோடிகளா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ