இதுனால தான் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர்.. இந்தியன் 2 பட்ஜெட் இத்தனை கோடிகளா

Indian 2 Movie Full Budget: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Indian 2 Movie Full Budget: இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு இன்னல்களை தாண்டி கடந்த 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2. சுமார் 28 ஆண்டுகள் கழித்து வெளியாகியிந்த இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்பினை வைத்திருந்தனர்.

1 /7

இந்தியன் 2 திரைப்படம்: கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் இந்தியன் 2. சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்த படம் திரையரங்கில் வெளியானது.  

2 /7

102 வயது தாத்தாவாக கமல்: இந்தியன் படத்தில் சேனாபதி-சந்துரு என்ற தந்தை மகன் இரட்டை வேட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததார். தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் 102 வயது முதியவராக நடித்திருந்தனர். ஆனால், அது துளியளவு கூட தெரியாத அளவிற்கு சண்டை காட்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.  

3 /7

கதறவிட்ட தாத்தா கமல்: விமர்சனங்களின் படி, படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமலின் சண்டை காட்சிகள் நன்றாக வந்திருப்பதாகவும், க்ளைமேக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியன் 3 படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதுவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.   

4 /7

மூன்று நாளில் 100 கோடி வசூல்: படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியன் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 25.6 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டாவது நாளில் 18.2 கோடியும், மூன்றாவது நாளில் 15.3 கோடி வசூலித்துள்ளது. ஓட்டு மொத்தமாக உலகளவில் மூன்று நாட்களில் இந்தியன் 2 படம் 109.15 கோடி வசூலித்துள்ளது.  

5 /7

இந்தியன் 2 நடிகர்-நடிகைகள்: இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்திருக்கிறார். அவருடன் இதில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் பிரியா பவானி ஷங்கர், ஜகன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.  

6 /7

மறைந்த நடிகர்களின் விவரம்: இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், நடிகர் விவேக்கின் காட்சிகள் AI மூலம் உருவாக்கப்பட்டிருந்தது.   

7 /7

இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்: தற்போது பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 250 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.