27 வருடங்களுக்கு பிறகு இணைந்த சூர்ய வம்சம் ஜோடி! வைரல் போட்டோஸ்..

Siddharth 40 Pooja Photos: தமிழ் திரையுலகில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் வைத்துக்கொள்ளப்படும் படம், சூர்யவம்சம். இதில் நடித்த சரத்குமாரும் தேவையானியும் 27 வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைந்திருக்கின்றனர். 

Siddharth 40 Pooja Photos: கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் நடிகைகளின் ரீ-யூனின் ஆக இருக்கிறது. த்ரிஷா-விஜய் (லியோ), விஜய்-சினேகா (GOAT) ஆகியோர் ஜோடியாக நடித்து வருவதை தொடர்ந்து, தற்போது சூர்யவம்சம் ஜோடியும் ஒரு புதிய படத்தில் கைக்கோர்த்திருக்கிறது. இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

1 /8

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கு சித்தார்த்த், தற்போது தனது 40வது படத்தில் நடிக்க இருக்கிறார். இவரை, தமிழ் ரசிகர்கள் தற்போது வெளியான இந்தியன் 2 படத்தில் பார்த்தனர். 

2 /8

சித்தார்த்தின் இந்த 40வது படத்தை ஸ்ரீ கணேஷ் இயகுகிறார். இந்த படத்தின் பூஜை தற்போது நடைப்பெற்றது.

3 /8

‘சித்தார்த் 40’ பட பூஜை விழாவில் மீதா ரகுநாத் கலந்து கொண்டார். குட் நைட் படம் மூலம் பிரபலமான இவர், தற்போது இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சைத்ரா அச்சரும் நடிக்கிறார்.

4 /8

தான் நடிக்கும் படங்களை பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், ‘சித்தா’ படத்தில் நடித்ததற்காக பலர் மத்தியில் பாராட்டு பெற்றார். அந்த வகையில் இந்த படத்தையும் நல்ல முறையில் தேர்ந்தெடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /8

சித்தார்த்தின் 40வது படத்தை, 8 தோட்டாக்கள் படத்தை டைரக்டு செய்த ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கிறார். கொரோனா பேப்பர்ஸ், குருதி ஆட்டம், 8 எம் எம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

6 /8

இப்படம், எமோஷனல் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்படம் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

7 /8

சித்தார்த் 40 படத்தின் பூஜை விழா நேற்று (ஜூலை 15) நடைப்பெற்றது இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

8 /8

1997ஆம் ஆண்டு வெளியான ‘சூர்ய வம்சம்’ படத்தில் இணைந்து நடித்த சரத்குமார்-தேவையானி கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் கைக்கோர்த்திருக்கின்றனர். இதனால் 90s கிட்ஸ் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.