Latest OTT Releases This Week : இந்தியாவில், ஓடிடி தளங்களின் வருகை, கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரித்து விட்டது. இதையடுத்து, தியேட்டர்களில் வெளியாகும் படங்களும் விரைவில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயன்:


தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம், ராயன். காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சரவணன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் கதை, பெரிதாக இல்லை என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. இந்த படத்தை, ஆகஸ்டு 23ஆம் தேதியான நாளை முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 


ஜமா:


சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி, சினிமா ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம், ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வலியையும், வெற்றிகளையும் எடுத்தியம்பும் கதையாக இருந்தது, ஜமா. இந்த படத்தை பாரி இளவழகன் இயக்கியிருந்தார். இப்படத்தை, நாளை முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 


விராஜி:


தெலுங்கில் வெளியாகி, ரசிகர்களை ஈர்த்த படம் விராஜி. அமானுஷ்ய த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை, நாளை முதல் ஆஹா தளத்தில் பார்க்கலாம். 


கிர்:


காமெடி டிராமாவாக உருவாகியிருக்கும் படம், கிர்ர் (Grr). இதில் அனாகா, குஞ்சுக்கோ போபன், ஸ்ருதி ராமச்சந்திரர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். த்ரில்லிங்கான அனுபவங்கள் வேண்டும் என்று பயணிக்கும் சிலரின் வாழ்க்கை குறித்து காமெடியாக கூறப்பட்டிருக்கும் படம்தா, கிர். இந்த மலையாள படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை பார்க்கலாம். 


முஞ்சியா:


வருண் தவான், சத்யராஜ், ஷர்வாரி, அபய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஹாரர்-த்ரில்லர் படம், முஞ்சியா. இந்தி மொழியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஸ்டார் கோல்ட் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 


மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?



உணர்வுகள் தொடர்கதை:


தமிழில் உருவாகியிருக்கும் ரொமாண்டிக் திரைப்படம், உணர்வுகள் தொடர்கதை. பாலு சர்மா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம், இந்த ஆண்டின் மார்ச் மாதம் வெளியானது. இதில் ஷெர்லின் செய்த் நாயகியாக நடிக்க, உடன் இணைந்து ரிஷிகேஷ் நாயகனாக நடித்திருக்கிரார். இந்த படத்தை, ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 


கல்கி 2898 ஏடி:


சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்த படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அவருடன் இணைந்து தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல காேடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தை நாளை (ஆகஸ்ட் 22) முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 


பிற படங்கள் மற்றும் தொடர்கள்:


மேற்கூறியவை மட்டுமன்றி இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட ஆகஸ்ட் 23ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?


>நைஸ் கேர்ள்ஸ் - ஃப்ரெஞ் - நெட்ஃப்ளிக்ஸ்
>இன்கமிங் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ்
>திட்கம் - இந்தி - ஜியோ சினிமா
>தி ஆக்ஸிடண்ட்- ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>ட்ரைவ் அவே டால்ஸ் - ஆங்கிலம் - ஜியோ சினிமா
>ஃபாலோ கர் லோ யார் - இந்தி - அமேசான் ப்ரைம் தொடர்
>ஜிஜி ப்ரிசிண்ட் - மாண்டாரியன் - நெட்ஃப்ளிக்ஸ்
>தி ஃப்ராக் - கொரியன் தொடர் - நெட்ஃப்ளிக்ஸ்
>ஸ்வகர்யம் சம்பவங்களும் - மலையாளம்  - மனோரமா மேக்ஸ்
>இன் தி லேண்ட் ஆஃப் செயிண்ட் சின்னர்ஸ் - ஆங்கிலம் - லாயன்ஸ் கேட்
>டெரர் டியூஸ்டே எக்ஸ்ட்ரீம்ஸ் சீசன் 1 - தாய் - நெட்ஃப்ளிக்ஸ்


மேலும் படிக்க | ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ