நம்ம கேப்டன் விஜயகாந்த்தா இது?... லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் சோகம்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புரட்சிக் கலைஞர், கேப்டன், கறுப்பு எம்.ஜி.ஆர் என பலவிதப் பெயர்களில் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த். வெற்றிகரமான நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான அரசியல்வாதி எனவும் பெயர் எடுத்த விஜயகாந்துக்கு இந்த இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஆரம்பகால படங்கள் சரியாக போகாவிட்டாலும் அதன் பிறகு விஜயகாந்த் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியவை. குறிப்பாக கிராமத்து ரசிகர்கள் விஜயகாந்த்தை தங்களது வீட்டில் ஒருவராகவே பார்த்தார்கள். அதனால் ரஜினி, கமலுக்கு இணையாக விஜயகாந்த் வளர்ந்தார்.
நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று சங்கத்தின் கடனை அடைத்து ஒரு ரோல் மாடலாக திகழ்ந்தவர். திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் ஆக்டிவ்வாக இருந்தபோது அந்தக் கட்சியை தொடங்கி தனக்கிருக்கும் தைரியத்தையும், செல்வாக்கையும் நிரூபித்தார். அதன் பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானதெல்லாம் யாராலும் மறக்கமுடியாதது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருந்த விஜயகாந்த் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதற்கு அவரது சில செயல்பாடுகளும், உடல் நிலையும் காரணம்
உடல்நிலை தொடர்ந்து ஒத்துழைக்காத சூழலில் அமெரிக்காவில் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் உடல்நிலை முன்னர்போல் அவருக்கு ஒத்துழைக்காததால் அரசியலில் சுற்றி சுழல முடியவில்லை.
இந்நிலையில் விஜயகாந்த்தின் சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தன. அதேசமயம் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறிவந்தனர். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனைக் கொண்டாடும் வகையில் அவர் கேக் வெட்டினார். அப்போது விஜயகாந்த் தனக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் விஜய பிரபாகரன்.
விஜயகாந்த்தின் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ந்து போனார்கள். ஜம்மென்று பார்த்து பழகிய விஜயகாந்த் அந்தப் புகைப்படத்தில் உடல் மிகவும் மெலிந்து போயிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம கேப்டனா இது என பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவர் மீண்டும் எழுந்து பழையபடி கர்ஜிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பலரும் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க | வாரிசு படத்திற்கு கம்மியான திரையரங்கா? விஜய் ரசிகரின் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ