The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது விஜயகாந்த் நடித்துள்ள காட்சி எவ்வளவு நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றன. இந்த படத்திற்கு GOAT - The Greatest Of All The Time (GOAT) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.


மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!


இதனிடையே கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என முன்னதாக வெளியான போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து சிறு சிறு அப்டேட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படம் தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் கோமியோ ரோலில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக மறந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் காட்சி அளிக்கயுள்ளதாக கூறப்படுகிறது. 



இந்நிலையில் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் எத்தனை நிமிடங்கள் வரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை நிமிடங்கள் வரை நடிகர் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய் பிறந்தநாளில் அப்டேட்:
இதனிடையே இந்த மாதம் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் வருவதால் அன்று கோட் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்த அர்ச்சனா கல்பாத்தி பட அப்டேட்டிற்காக ரசிகர்களை காத்திருக்குமாறு என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகளா?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ