கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ஒருமுறை நடிகர் பரணியை பார்த்து 'சேரி பிகேவியர்' என கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.


இந்த சமூகத்தை இழிவுபடுத்தும்படி பேசிய காயத்ரி, தொகுத்து வழங்கிய கமல், அந்த வார்த்தையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது 100 கோடி ருபாய் நஷ்டஈடு தரவேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.


இந்த வார்த்தை குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. 


அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம், தனியார் டி.வி. நிறுவனம், தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் 2 வாரத்துக்கும் மேலாகியும் மன்னிப்பு கேட்கவில்லை.


எனவே ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு எனது வக்கீல் மூலம் நடிகர் கமல்ஹாசன், நடிகை காயத்ரி ரகுராம், தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவார காலத்துக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.


இவ்வாறு அவர் கூறினார்.