Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ
Leo Day 6 Box Office Collections: ஆறாவது நாளான நேற்று தமிழகத்தில் ரூ21.50 கோடியும், கேரளாவில் 5 கோடியும், கர்நாடகாவில் 3.50 கோடி வசூலை அள்ளி உள்ளது லியோ திரைப்படம்.
லியோ திரைப்படத்தின் ஆறாம் நாள் வசூல் நிலவரம்: லியோ திரைப்படம் வெளியாகி ஆறு நாட்களான நிலையில், தற்போது இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூலை எட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ திரைப்படம்:
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு தளபதி விஜய் (Actor Vijay) மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படமான லியோவும் வெற்றி ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. லியோ (Leo Movie) படம் கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களின் தொடர்ச்சிகளை கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். லியோ படம் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான விஜய் படங்களை போன்று அறிமுக பாடல், சண்டைக்காட்சி இல்லாத முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்தது.
லியோ படத்தின் முதல் நாள் முதல் நான்காம் நாள் வரை வசூல் நிலவரம்:
இதனிடையே இந்திய அளவில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது நாளில் ரூ.35.25 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.39.8 கோடியும், நான்காவது நாளில் ரூ.41.55 கோடியும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்
ஐந்தாம் நாள் சிறப்பு வசூல் வேட்டை:
நேற்று முன்தினம் அதாவது ஐந்தாவது நாளில் ரூ.35.19 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படம் இந்தியளவில் 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் 400 கோடிவரை வசூலித்துள்ளது.
லியோ திரைப்படத்தின் ஆறாம் நாள் வசூல் நிலவரம்:
இந்நிலையில் தொடர் விடுமுறை தினம் என்பதால், லியோ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகின்றது. அந்த வகையில் ஆறாவது நாளான (Leo Box Office Collection Day 6) நேற்று இந்தியாவில் இந்தத்திரைப்படம் 250 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. நேற்று மட்டும் லியோ திரைப்படம் 31 கோடி வசூல் செய்திருக்கிறது. உலகளவில் 415 கோடி வசூல் செய்திருக்கிறது.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்:
லியோ படத்தில் நடிப்பதற்காக விஜய் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் ‘தளபது 68’ விஜய் 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தில் விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கியுள்ளவர், சஞ்சய் தத்தான் என கூறப்படுகிறது. பான் இந்திய நடிகரான இவர் பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் விஜய் போலவே திரையுலகில் மிகவும் அனுபவசாலி. கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த பிறகு, தற்போது இவர் பான் இந்திய அளவில் பெரிய நடிகராக வலம் வருகிறார். இவர், லியோ படத்திலும் ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அடுத்த பிசினஸ்.. புதிய நாப்கின் தொழிலை ஆரம்பித்த நயன்தாரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ