லியோ படம் LCUவில் வருமா? வராதா? வெளியான முக்கிய தகவல்!
Leo update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று தளபதி விஜய் நடித்த லியோ ஆகும், இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது. இது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் வெற்றியின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர்களைப் பெற்றுள்ளார். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் அல்லது எல்.சி.யு-வில் அவர் தயாரிக்கும் அடுத்த படம் என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அடுத்த பார்ட் எடுப்பதற்கான சாத்தியா கூறுகளுடன் முடிவு பெற்று இருக்கும். இந்நிலையில், லியோ படமும் இந்த எல்சியு-வில் இடம் பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நிலவி வந்தது. வெளியான தகவலின் படி, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில் இதுவரை கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்கள் வெளியான நிலையில், மூன்றாவது படமாக லியோ இருக்கும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் இதற்காகவே திரைக்கதையில் மெனக்கெட்டுள்ளார்.
மேலும் படிக்க | பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்..! எப்போ கல்யாணம் தெரியுமா..?
லியோவின் திரைக்கதையை ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோருடன் லோகேஷ் எழுதியுள்ளார், மேலும் படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. லியோ படம் எல்சியுவில் இணைந்துவிட்டால், தமிழ் சினிமாவின் சில பெரிய சினிமா ஜாம்பவான்களை ஒன்றிணைக்கும், இதில் கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி மற்றும் ஃபகத் பாசில் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். லியோ படம் வெளியாவதற்கு முன் ரசிகர்களுக்கு பல்வேறு சர்பிரைஸ்களை படக்குழு வைத்துள்ளது. முதலில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 30, 2023 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்திலும், த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பரிவ் சண்டைக்காட்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக மிகப்பெரிய அளவில் தற்போதே டோக்கனை போட்டுள்ளதால் திரையரங்க உரியமையாளர்கள் தற்போது படத்திற்கான காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் லியோ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் விஜய்யின் லியோ திரைப்படத்தின் லண்டன் உரிமையை வாங்கியுள்ள அஹிம்சா என்ற நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லியோ படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்காமல் திரைப்படத்தை லண்டனில் வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படத்தின் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், இதற்காக அமெரிக்காவில் சில டெஸ்ட் சூட் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | போட்டோஷூட் நடத்திய நடிகர் விஷால் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ