லியோ படத்திற்கு கூடுதல் காட்சிக்கு அனுமதி! ஆனாலும் ஒரு ட்விஸ்ட்!
Leo Ticket Booking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தப் படத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அதிகாலை காட்சிகளை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். அதிகாலை 04:00 மணி மற்றும் காலை 07:00 மணி காட்சிகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கடைசியாக துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு 4 மணி சிறப்பு காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு படத்திற்கும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் படிக்க | திருப்பதியில் லோகேஷ் கனகராஜ்! நண்பர்களுடன் சுவாமி தரிசனம்!
இந்நிலையில், லியோ படக்குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, திரையரங்குகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்று கூறியுள்ளது. ஆனாலும், இதில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது தமிழக அரசு. 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்து அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி இருக்கிறதா? இல்லையா என்று தெளிவாக கூறவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும், சுகாதார பாதிப்பு மற்றும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதாமல் காவல் துறையின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்போடு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு சுட்டிக் காட்டி உள்ளது.
லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் லியோவின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகி, இதுவரை 48 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. வன்முறைச் செயலின் மூலம் உள்ளூர் மக்களிடையே ஹீரோவாகி வரும் ஒரு சாதாரணமான பேக்கரி உரிமையாளரை சுற்றி லியோ கதை நடக்கிறது என்பதை ரெய்லர் வெளிப்படுத்துகிறது. இருப்பினும், படத்தில் ஒரு விஜய்யா அல்லது இரண்டு விஜய் உள்ளாரா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்.
லியோவின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்று கூறப்படுகிறது. படம் ரிலீசுக்கு முன்பே பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்துள்ளது. உலகளாவிய திரையரங்கு உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள், ஆடியோ உரிமைகள் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர் ரூ.200 கோடி லாபம் ஈட்டி உள்ளது. லியோ படத்தின் வணிகம் இந்திய சினிமாவில் இது வரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் கோலிவுட்டில் நம்பர் 1 நடிகராக உயர்ந்துள்ளார் விஜய். லியோவின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் 100 கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளர் விற்பனை செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் மூன்று இலக்கத்தை தொடுவது இதுவே முதல் முறை. பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பார்ட்! 99 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ