விஜய் ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த 'வாரிசு' படம் திரையரங்குகளில் வெளியாகி பல குடும்பங்களை கவர்ந்துள்ளது.  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  படம் வெளியாவதற்கு முன்பு எப்படி வாரிசு vs துணிவு என்கிற போட்டி இருந்து வந்ததோ, அதேபோல படம் வெளியாகிய பின்னரும் இந்த போட்டி இருந்து வருகிறது.  'துணிவு' படம் வெளியாவதற்கு முன்னரே ஜனவரி 10ம் தேதி இரவன்று வாரிசு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.  மேலும் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பல திரை பிரபலங்கள் திரையரங்கிற்கு வருகை தந்ததோடு, படம் குறித்த தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆஸ்கரில் வரலாறு படைத்த 'நாட்டு நாட்டு' பாடல்!



'வாரிசு' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண குரோம்பேட்டையிலுள்ள வெற்றி திரையரங்கிற்கு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்றிருந்தார்.  'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து 'தளபதி 67' திட்டத்தில் இணைந்துள்ளார், இப்படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்னரிலிருந்தே ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக காத்துகொண்டு இருந்தனர்.  லோகேஷ் கனகராஜ் எப்போது 'தளபதி 67' படம் குறித்த அப்டேட்டுகளை வழங்குவார் என்று ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்யும்படியான ஒரு விஷயத்தினை பகிர்ந்து இருக்கிறார்.  வாரிசு படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தவர், வாரிசு படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் விஜய் நடித்ததை பார்ப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்து இருக்கிறார்.



அப்போது அங்கு சூழ்ந்திருந்த ரசிகர்கள் பலரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட் கேட்டு கூச்சலிட்டனர், அதற்கு பதிலளித்தவர் வாரிசு படம் இன்று வெளியாகிவிட்டது அதனால் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறினார்.  மேலும் பொங்கலுக்கு ஏதாவது சிறப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, விரைவில் தேதியை அறிவிப்பேன் என்று லோகேஷ் உறுதியளித்துள்ளார்.  இந்த செய்தி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.  'தளபதி 67' படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என்றும், மேலும் படத்தில் சஞ்சய் தத், நிவின் பாலி, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | Veera Simha Reddy Review : காற்றில் பறக்கும் எதிரிகள்.. வீர சிம்ஹா ரெட்டி படம் ரிவியூ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ