நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெனாவட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக நடித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா (Poonam Bajwa) தமிழ்ப்படங்களில் மட்டுமின்றி மலையாளத்தில் கேரக்டர் நடிகையாகவும் நடித்து வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நாயகியாகவும், கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ள பூனம் பாஜ்வா மாஸ்டர் பீஸ், மரியா உள்ளிட்ட சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலும் நடித்துள்ளார். அத்துடன் சமீபகாலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை. வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் பதோன்பதம் நோட்டந்து எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் படிக்க | உங்களை சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக மாற்றும் ரஜினிகாந்தின் 10 படங்கள்!


இதனிடையே எப்போதும் மிகவும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூனம் பாஜ்வாவின் சமீபத்திய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.



இந்த நிலையில்,  இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார். அதில், உங்களை எனக்கு பிடிக்கும். நான் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க நான் ரெடி. எனக்கு வயது வித்தியாசம் ஒன்றும் பிரச்சனை இல்லை. என் அம்மாவை சமாளித்துவிட்டேன். திருமணத்திற்கு பின்னும் கிளாமராக நடிக்கலாம் என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருக்கிறார் என்று நடிகை பூனம் பாஜ்வா கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ரஜினிக்கு பாபா வில்லன் பிறந்தநாள் வாழ்த்து! என்ன கூறினார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ