நாய்களை கண்டுகொள்ளாதீர்கள். அதுவே ஓடிவிடும் - கவிஞர் வைரமுத்து
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து அவர் மீதான தொடர் விமர்சனங்களுக்கு பதில் அளித்திருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து அரிதாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவார். பொது நிகழ்ச்சிகளில்தான் அவரை அதிகம் பார்க்க முடியும். அவர் சமீபத்தில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அவர் மீது பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார்.
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதன்மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. வைரமுத்துவும் இதுகுறித்து எதுவுமே பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் வைரமுத்து.
மேலும் படிக்க | பீஸ்ட்டை தாழ்த்தி பேசுவது தவறு - ஆரி காட்டம்
”உங்களை துரத்தும் நாயை கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லையென்றால் அது உங்களை துரத்திக் கொண்டே வரும். விமர்சனங்கள் மீது பதில் சொல்ல ஆரம்பித்தால் நாயோடு போராடுவதிலேயே வாழ்க்கை போய்விடும். நாயை கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் புறம்திரும்பி ஓடிவிடும்.” என்று வைரமுத்து பேசியிருக்கிறார்.
நேரடியாக அவர் சின்மயியை சொல்லவில்லை என்றாலும் அவர் அழுத்தமாக அதைதான் பதிவு செய்திருப்பதாக வலைதளத்தில் பேச்சு எழுந்துள்ளது. மேலும் ”நான் காதலால்தான் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். எனக்கு தாய், காதலி எல்லாமே மனைவிதான்.” என்றும் வைரமுத்து அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | காருக்குள் அத்துமீறி ஏறிய இளைஞர்... கூச்சலிட்ட ஷில்பா ஷெட்டி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR