`டோனியின் சொல்லப்படாத கதை` - இன்று வெளியீடு
"டோனியின் சொல்லப்படாத கதை" இன்று அதிகாரபூர்வமாக ரீலீஸ் செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகள் மற்றும் சாதனைகள் படைத்த கேப்டன் டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் "டோனியின் சொல்லப்படாத கதை" அப்படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய டோனி கூறியதாவது:-
இப்படத்தில் கவர்ச்சி நாயகனாக நான் சித்தரிக்கப்படுவதை விரும்பவில்லை. என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களையும், கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தேன், கிரிக்கெட்டுக்கு வந்த பின் என்னுடைய பயணம் எப்படி இருந்தது, எவ்வாறான கஷ்டங்களை சந்தித்தேன் என்பதை மையமாக கொண்டே படம் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்திய கிரிக்கெட் அணிக்காக நான் விளையாடுவேன் என்று சற்றும் நினைத்து பார்த்தது கிடையாது, சாதனைகள் பற்றி சிந்தித்ததும் கிடையாது என தெரிவித்துள்ளார்.