இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் படம்தான் 'மாநாடு'. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் (Maanadu) சிம்புவிற்கு (Actor Simbu) ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படம் டைம் லூப் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மாநாடு படத்தின் டிரெய்லரை பார்த்த போதே தெரிந்தது. அதேபோல், இவர் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!


இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகள் அரங்கை நிறைத்தன. அதன் படி இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்புவுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த படத்தின் வெற்றி விழா ஜனவரி 6 நடக்க இருந்தது.


இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான், கொரோனா பரவி வருவதால் ரசிகர்களின் நலன் கருதி ஜனவரி 6 நடக்க இருந்த மாநாடு திரைப்பட வெற்றி விழா தள்ளிவைக்கப்படுகிறது என்று அகில இந்திய தலைமை மன்றம் அறிக்கை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளது.



ALSO READ | ’சிம்பு, வெங்கட்பிரபு அட்ரஸ் வேனுமா?’ பிரேம்ஜி டிவிட், எஸ்.ஜே.சூர்யா ரியாக்ஷன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR