Maari TV Serial Online: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் திருவிழாவில் சாமுண்டீஸ்வரி என்ட்ரி கொடுத்து தாராவின் பிளானை முறியடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது சாமுண்டீஸ்வரி மாரியை எதுக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பின என்று கேட்க தாரா அவங்களா தான் போனாங்க, என் தகுதிக்கு நான் போய் மாரியை கெஞ்சணுமா? இருந்தாலும் நான் போய் கூப்பிட்டேன், வர மாட்டேன்னு சொல்லிட்டா என்று கூறுகிறாள். அதோடு சூர்யாவிடமும் பேசினேன் அவனும் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு போய்ட்டான் என்று பழியை தூக்கி அவர்கள் மீதே போடுகிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தளபதி விஜய் நிராகரித்து பின்னால் பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படங்கள்!


உடனே ஹாசினி அதுவும் தேவியம்மா வீடு தான், மாரி அந்த வீட்டில் தான் குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்படுறா என்று சொல்கிறாள். அடுத்து சாமுண்டீஸ்வரி சொத்துகளை திரும்ப மாரி குழந்தை பெயரில் மாற்றி எழுத வேண்டும் என்று தாராவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.  இதனை தொடர்ந்து மாரியிடம் வளைகாப்பு செய்ய போவதாக சொல்ல சொத்துக்கள் விஷயம் ஓகே, ஆனால் ஸ்ரீஜா, ஹாசினி அக்காவை எல்லாம் விட்டுட்டு எனக்கு மட்டும் தனியா வளைகாப்பு செய்யணுமா என்று கேட்க ஹாஸினி ஸ்ரீஜா தினேஷோட வெளியே போய் இருக்கா, அவ எப்போ வருவான்னு தெரியாது. எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. 


சாமுண்டீஸ்வரி அப்பா இப்போ போன குழந்தை பிறந்த பிறகு தான் வருவாங்க. அவங்க ஆசைப்படி செய்யட்டுமே என்று சொல்ல மாரி ஓகே சொல்கிறாள்.  இதனையடுத்து சாமுண்டீஸ்வரி மாரிக்கு புடவை, நகையெல்லாம் கொடுத்து தயாராகி வர சொல்ல மாரியும் ரெடியாகி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Malavika Mohanan: மாளவிகா மோகனனுக்கு விரைவில் திருமணமா? உண்மை என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ