சீதா ராமன் அப்டேட்: நான்ஸிக்கு சவால் விடும் சீதா.. மகா கொலையில் சேதுவுக்கு வரும் புது சந்தேகம்

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2024, 03:09 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • அதிர்ச்சி கொடுக்கும் நேன்சி.
  • உண்மையை உடைக்கும் அர்ச்சனா.
சீதா ராமன் அப்டேட்: நான்ஸிக்கு சவால் விடும் சீதா.. மகா கொலையில் சேதுவுக்கு வரும் புது சந்தேகம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி சீதா ஜெயிலுக்கு போனால் நான் வீட்டை விட்டு போறேன் என்று ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சீதா போட்ட கோலத்தை கலைத்து ப்ரியாவை திட்டிய நான்ஸியை அர்ச்சனா கேள்வி கேட்க உண்மையை சொல்லி ஜெயிலுக்குள் துரத்திடுவேன் என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  

அதிர்ச்சி கொடுக்கும் நேன்சி

அதாவது, எல்லாரும் ஒன்று கூடி நான்சியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கின்றனர், உனக்கு ஆபிஸ்ல தானே ஷேர் இருக்கு வீட்டில் இல்லையே என்று சொல்ல நான்ஸி வீட்டிலும் ஷேர் இருப்பது போல் பேசி அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனை தொடர்ந்து சுபாஷ் நீ என்ன வேணாலும் பண்ணுடானு ஒரு வார்த்தை சொல்லுங்க இந்த நான்ஸியை நான் பார்த்துக்கறேன் என்று துள்ளுகிறார். 

அடுத்து ஆபிஸ் வந்த சேது நான்ஸி செய்வதையெல்லாம் நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்க ஒருவர் வந்து மகா மேடம் சைன் பண்ண வேண்டிய இடத்தில நான்சி மேடம் கிட்ட சைன் வாங்கிவா என்று கேட்க சேது அவரை பளாரென அறைந்து வேலையை விட்டு துரதிக்கிறார். மகாவை கொன்னது நான்ஸி தான் சந்தேகம் படுகிறார். ஆனால் ராம் அவசரப்பட்டு யார் மேலயும் சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்கிறார். 

மேலும் படிக்க | அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

உண்மையை உடைக்கும் அர்ச்சனா

இதனையடுத்து அர்ச்சனா சுபாஷிடம் மகாவை கொல்ல நானும் கல்பனாவும் முயற்சி செய்த விஷயம் நான்ஸிக்கு தெரிந்து போச்சு என்ற உண்மையை உடைக்க சுபாஷ் அதிர்ச்சி அடைகிறான், இருவரும் நான்சியை தீர்த்து கட்டிடலாம் என்று முடிவெடுக்கிறனர். அடுத்து நான்ஸி சீதாவையும் மற்றவர்களையும் வம்பிழுத்து சீட்டு விளையாட கூப்பிட சீதா சவாலை ஏற்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தனுஷ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி-கமல்!?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News