விஜய் நடித்துள்ள மெர்சல் படம் மீதான இடைக்கால தடையை வரும் வெள்ளிக்கிழமை (06-10-2017) வரை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’  படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100_வது படமாக தயாரித்துள்ளது. 


கிட்டத்தட்ட ரூ.130 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’  படத்த்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்கள் மத்தில் பெரும் வரவேற்ப்பு பெற்றது. மேலும் இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.


முன்னதாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என தடை விதித்து ஆணை பிறப்பித்தது. மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி இருந்தது.


இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இரு தரப்பு சார்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 6-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுவரை மெர்சல் படம் தொடர்பாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.