SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”  திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடித்திருக்கின்றனர். இதனை  இயக்குநர் வாலி மோகன் தாஸ் புதுமையான திரில்லர் வடிவில் இயக்கியிருக்கிறார். “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. 


இந்நிகழ்வினில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது, "என் புரோடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா  இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட  கேட்காமல்  தயாரித்தார்” என்று கூறினார். 


நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது, “அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர்” என்றார். 


நடிகை நிஹாரிகா பேசியதாவது, “எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மிக நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர்” என்று கூறினார். 


மேலும் படிக்க | காதலியுடன் அர்ஜுன் தாஸ்! இது ‘அந்த’ நடிகையா? வைரலாகும் போட்டோ..


நடிகர் கலையரசன் பேசியபோது, “மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.  ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்” என்று கூறினார். 


நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசிய போது, “தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார் , மிக அருமையாக இருந்தது, அந்தப்படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது” என்று கூறினார். 


மேலும் படிக்க | GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ