சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,82,691 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,06,58,234 ஆக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம் தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா (Coronavirus) உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்கள் கோவிட் பாசிட்டிவ்!


இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மாளவிகா மோகனன் (Malavika Mohanan) புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்., சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் மூத்த மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் அவர்களுடன் உரையாடியுள்ளார். மருத்துவர் ஜெயந்தி நடராஜன் அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீன் ஆக இருக்கிறார்.  இவர் கொரோனாவுக்கு எதிரான போரில் கடந்த ஒரு வருடமாக ஏராளமான கோவிட் நோயாளிகளை காப்பாற்றியுள்ளார். 


 



 


ஜெயந்தி நடராஜன் அவர்களுடன் மாளவிகா மோகனன் உரையாடிய இந்த வீடியோவில் கோவிட் குறித்து எழும் பொதுப்படையான சந்தேகங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கல் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், வைட்டமின் உணவுகள் ஆகியவை குறித்து டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR