Shine Tom Chacko Wedding Stopped : தென்னிந்தியாவின் பிரபல நடிகராக விளங்கிய சைன் டாம் சாக்கோவிற்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், இவரது திருமணம் நின்று போயுள்ளது. இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைன் டாம் சாக்கோ:


கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர், சைன் டாம் சாக்கோ. ஆரம்பத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த இவர், அவ்வப்போது சில துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 2011ஆம் ஆண்டு முதல் இவரது சினிமா பயணம் தொடங்கியது. இவரது நடிப்புக்கு கிஃப்டாக இன்னும் பல வாய்ப்புகள் வந்தன. 


2022ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், தீவிரவாதிகளுள் ஒருவராக வரும் அவர் பின்னர் ஹீரோவின் கூட்டத்துடன் இணைந்து அவர்களுடன் பணிபுரிபவரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே ஆண்டில் இவர் நடித்த மலையாள படமான தல்லுமலா வெளியானது. பின்னர் தொடர்ந்து இவர் நடித்த ஜிகர்ந்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் கன்னூர் ஸ்குவாட் ஆகிய படங்களும் மெகா ஹிட் அடித்தன. கூடவே, தசரா திரைப்படத்தில் இவரது முரட்டுத்தனமான நடிப்பும் அப்படம் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்திருந்தது. 


மேலும் படிக்க | காதலியை கரம்பிடிக்கிறார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ!


திருமண நிச்சயதார்த்தம்:


கடந்த வருடம், ஷைனிற்கும் தனுஷா எனும் மாடலிங் பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த பெண், அவரது நீண்ட நாள் தோழி என்றும், பின்னர் இருவரும் காதலராக மாறியதாகவும் கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கூட இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், இவர்களின் காதலிற்கும் திருமண கணவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 


தனுஜா நேர்காணல்:


சாக்கோவை திருமணம் செய்து கொள்ள இருந்த தனுஜா தனக்கும் அவருக்கும் பிரேக் அப் ஆகி விட்டதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இது குறித்து பேசியிருக்கும் அவர், தான் ஒரு காதல் உறவில் இருந்ததாகவும்  அது தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறர். தாங்கள் ஒருவரை ஒருவர் மிகவும் காதலித்ததாகவும் ஆனால் அது டாக்ஸிக்காக மாறியதை தொடர்ந்து அதிலிருந்து விலகி விட்டதாகவும் பேசியிருக்கிறார். 


தங்களின் காதல் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராததால் இந்த முடிவை எடுத்ததாகவும், நடிப்பையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள முடியும் என நினைத்த தங்களுக்கு இது செட் ஆகாது என தெரிந்த பின்பு இம்முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து, சைன் டாம் சாக்கோ குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | 42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r