42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..

Actress Meera Vasudevan : மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவரது புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகிறது. 

Actress Meera Vasudevan : மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர், மீரா வாசுதேவன். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், அறிமுகமானதும் மலையாள சினிமாவில்தான். ஆரம்பத்தில் நாயகியாக நடித்து வந்த இவர், பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தில் அண்ணியாக நடித்ததன் மூலம் சமீப காலத்தில் பிரபலமானார். இவர், தற்போது 3வது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டது யார்? அவருக்கும் இவருக்கும் எத்தனை வயது வித்தியாசம்? இங்கு பார்க்கலாம்!

1 /8

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர், மீரா வாசுதேவன். இவர் முதன் முதலில் தெலுங்கில் கோல்மால் படம் மூலம் அறிமுகமானார். 

2 /8

தமிழில் முதன் முதலாக, உன்னை சரணடைந்தேன் எனும் படம் மூலம் அறிமுகமானார். 

3 /8

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்

4 /8

இவருக்கும் தமிழ் திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் ஜான் கொக்கனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது. இதற்கு முன்னர் அவர் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஜானுக்கு 2019ஆம் ஆண்டு துணை நடிகை பூஜாவை திருமணம் செய்து கொண்டார். 

5 /8

மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 

6 /8

மீராவிற்கு தற்போது 42 வயதாகிறது. இந்த வயதில் அவர், தன்னை விட 6 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

7 /8

இவர் மூன்றாவதாக திருமணம் செய்திருக்கும் நபரின் பெயர் விபின் புதியாங்கம். இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

8 /8

விபின்-மீரா வாசுதேவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றதை தொடர்ந்து, இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.