மாஸ்டர் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் கவனம் பெற்ற அவர், சமூக ஊடகங்களில் கவர்ச்சி புகைப்படங்களை கொத்து கொத்தாக இறக்கினார். இதனால், சமூக ஊடகங்களில் வைரலான அவருக்கு, சினிமா துறையினரின் கவனமும் வெகு சீக்கிரமே கிடைத்துவிட்டது. அடுத்து என்ன? பட வாய்ப்புகள் வரிசை கட்டின. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கடல் அலையில் பாறை மீது தவறி விழுந்த டிடி அக்கா


இதனால் மார்க்கெட்டில் உட்சத்துக்கு சென்ற மாளவிகாவுக்கு மாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கார்த்திக் நரேன் இயக்கிய அந்தப் படத்தில் தனுஷின் காதலியாக நடித்த அவர், படுக்கையறை காட்சி ஒன்றிலும் நெருக்கமாக நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய மாளவிகா, கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பைக்கில் நீண்டதூரம் சென்ற அனுபவம் உண்டா? என ஒருவர் கேட்க, இத்தாலியில் சுமார் 18 மணி நேரம் தொடர்ச்சியாக பைக் ஓட்டிச் சென்றதாக தெரிவித்தார்.



மற்றொரு ரசிகர், நீங்கள் மாலத்தீவு செல்ல இருக்கிறீர்கள் என கேட்க, என்னை விட நான் மாலத்தீவு செல்வதை அதிகம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல என பதில் கேள்வி எழுப்பினார் மாளவிகா. இப்படி சுமூகமாக சென்றுகொண்டிருந்த கலந்துரையாடலில் உள்ளே குதர்க்கமான நெட்டிசன் ஒருவர், ஆபாசமான நோக்கில் மாளவிகாவை நோக்கி கேள்வி எழுப்பினார். 



அதாவது, தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் படுக்கையறை காட்சியை எத்தனை முறை டேக் எடுத்தீர்கள் என்று வினவினார். இந்த கேள்வியில் கொந்தளித்த மாளவிகா, உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்தார். மேலும், சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் எது? என கேட்க, கிரீத்தி சுரேஷ் வீடு எனத் தெரிவித்தார். 



மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 5 ஜோடிகள் திருமணமா? தீயாக பரவும் புகைப்படம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR