இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஜூன் 24 ஆம் தேதி மாமனிதன் திரைப்படம் வெளியானது.  நடிகை காயத்திரி லீட் ரோலில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்ததுடன், தந்தை இளையராஜாவுடன் இணைந்து கூட்டாக இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான மாமனிதன் திரைப்படத்துக்கு வழக்கம்போல் கலவையான விமர்சனமே கிடைத்தது. ஆனால், திரைத்துறை வட்டாரத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏகே 61-க்கு மாஸா..கிளாஸா வந்திறங்கிய முக்கிய பிரபலம்


இயக்குநர் சங்கர் அண்மையில் இப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பரான திரைப்படம் என வெகுவாக பாராட்டினார். குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள அவர், அவரது நடிப்புக்கு தேசிய விருது கொடுக்கலாம் என புகழ்ந்துள்ளார். படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிட்ட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்ததாகவும், இயக்குநர் சீனுராமசாமி மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதேபோல், முன்னணி திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மாமனிதன் திரைப்படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனால் இயக்குநர் சீனுராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.



மாமனிதன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஆஹா கைப்பற்றியுள்ளது. பெரும் தொகைக்கு மாமனிதன் திரைப்படத்தினை வாங்கியிருக்கும் அந்த நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கொடுத்த அறிவிப்பில், மாமனிதன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பெறுவதில் மகிழ்ச்சி, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’... மன்சூர் அலிகானின் ரகளை நடனம் - வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR