லைகா புரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை தமிழ் திரையுலகில் படமாக்க வேண்டும் என எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரையிலான மிகப்பெரிய நடிகர்கள் எடுத்த முயற்சிகள் கானல் நீராக போன நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் பெருமுயற்சியால் இப் பெரும் படைப்பு சாத்தியமாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நயன்தாராவைக் கைது செய்ய வேண்டும்: காவல் ஆணையரிடம் புகார்


கல்கியின் எழுத்துகளுக்கு உருவம் கொடுத்துள்ள மணிரத்னம், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறைவு செய்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். துபாயில் இருக்கும் தன்னுடைய ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ரகுமான், அது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். சென்னையில் இருந்த மணிரத்னம், திடீரென துபாய் பறந்துள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்தின் பேக்ரவுண்டு மியூசிக் பணிகளை கையோடு முடித்துவிட வேண்டும் என்பதற்காக அங்கு சென்றுள்ள அவர், ரகுமானுடனே தங்கியுள்ளாராம். இதனை யூ டியூப் சேனல் பேட்டி ஒன்றில் ரகுமான் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் காட்சிகள் அனைத்தும் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருப்பதால், அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR