நயன்தாரா, விக்னேஷ் சிவனைக் கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன இயக்குநர் விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். இப்படத்தின் மூலமே நயன்தாராவின் நட்பு கிடைக்க, பின்னாளில் அது காதலாக மாறியது. இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் ஆகிய இரு படங்களைத் தயாரித்துள்ளனர்.
தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், அடுத்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குகிறார். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனைக் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் தரப்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
இது தொடர்பாக சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மார்ச் 20ஆம் தேதி அன்று முதல் சமூக வலைதளங்களில் அஜித் குமாரின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அன்று இரவு இயக்குநர் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அந்தக் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் டீம் பட்டாசு வெடித்துக் கொண்டாடினோம் என்று அவரே தெரிவித்துள்ளார். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழக காவல்துறை அதிகாரிகள் ரவுடிகளை அழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், ஒரு இயக்குநர், பிரபல நடிகை நயன்தாரா ரவுடி பிக்சர்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக காவல்துறை அதிகாரிகள் ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானவர்கள். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார்கள்.
ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தடை செய்ய வேண்டும். இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவைக் கைது செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு யார் அச்சுறுத்தல் செய்தாலும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதேபோல் இவர்கள் மீதும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு சமூக ஆர்வலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் இந்தப் புகார் மனு குறித்து விசாரிப்பார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பீஸ்ட்-உடன் ஒத்தைக்கு ஒத்தை மோதும் படம் : வெற்றி யாருக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR