மஞ்சு வாரியரின் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது
திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான `ஃபுட்டேஜ்` படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.
திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.
"அஞ்சம் பாதிரா", "கும்பளங்கி நைட்ஸ்," மற்றும் "மஹேஷின்டே பிரதிகாரம்" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிய படம் 'ஃபுட்டேஜ்'. இந்தப்படத்தின் படப்பிடிப்பை மலையாள நடிகையும் தமிழில் ‘அசுரன்’ ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவருமான மஞ்சு வாரியர் திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில் தொடங்கி வைத்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.
மேலும் படிக்க | வாரிசு ரிலீஸ்க்கு முன் விஜய் வாங்கிய சத்தியம்... வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்!
இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். அனீஷ் C சலீம் லைன் புரொடியூசராக பணியாற்றுகிறார்.
ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து, கூட்டு முயற்சியாக "ஃபுட்டேஜ்" படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷினோஸ் பணியாற்ற, கலை இயக்குநராக அப்புண்ணி சாஜன் பணியாற்றுகின்றனர். மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோஸ் VFX பணிகளை கவனிக்க, சமீரா சனீஷால் உடை வடிவமைப்பு பணிகளையும், ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் அவர்களும் செய்கின்றனர்.
இந்த திரைப்படம் ஃபவுண்ட் புட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த முயற்சியானது, திரைப்படத்துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தினை சந்தீப் நாராயண் வடிவமைக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் பாடல்களை வழங்க, சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் அறிமுகமே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்ததை அடுத்து, படம் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்குமோ என திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க துவங்கிவிட்டனர். மஞ்சு வாரியரின் திரை ஆளுமை, சைஜு ஶ்ரீதரனின் அறிமுக இயக்கம் என இப்படம் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ