வாரிசு ரிலீஸ்க்கு முன் விஜய் வாங்கிய சத்தியம்... வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்!

Thalapathy 68 Venkat Prabhu: தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வெங்கட் பிரபு விஜய்க்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 22, 2023, 12:14 AM IST
  • தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
  • இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
  • இப்படத்தின் அறிவிப்பை விஜய் இன்று வெளியிட்டார்.
வாரிசு ரிலீஸ்க்கு முன் விஜய் வாங்கிய சத்தியம்... வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்! title=

Thalapathy 68 Venkat Prabhu: விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான வாரிசு படம் நல்ல வசூலை குவித்தது. கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியின் மத்தியிலும் வாரிசு படம் நன்றாக ஓடியது எனலாம். அதை தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்தது. 

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி கூட்டணியை தொடரும் வகையில், விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டது. படம் அக். 19ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேன்ன உள்ளிட்டோர் லியோ படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் டைட்டில் அறிவிப்பே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 

மேலும் படிக்க | வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்

இதற்கிடையில், விஜய்யின் 68ஆவது படம் குறித்து பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், இன்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. குறிப்பாக, அந்த அறிவிப்பை வீடியோ வடிவில் நடிகர் விஜய் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 'Next...' என குறிப்பிட்டு விஜய் வெளியிட்ட அந்த வீடியோவில், படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், வெங்கட் பிரபு தயாரித்து, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 20 வருடங்களுக்கு பின், புதிய கீதை படத்திற்கு அடுத்து யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து, யுவன் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"நீண்ட காலம் கழித்து நடிகர் விஜய்யுடன் பணியாற்றுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவும் இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,"என்னை நம்பியதற்கு நன்றி விஜய். பட அறிவிப்புக்கு பிந் தான் இந்த புகைப்படத்தை வெளியிடுவேன் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். இந்த புகைப்படம் 10 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. ஆம், கனவுகள் மெய்ப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம், நடிகர் விஜய் வாரிசு படப்பிடிப்பின் போதே இந்த படத்தின் கதைக்கு ஓகே சொல்லியுள்ளார் என தெரிகிறது. இதன்பின்னர், லியோ படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் லவ் டுடே வெற்றிக்கு பின், இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் என தெரிகிறது. மேலும், விரைவில் லியோ படப்பிடிப்பு முடிவடையும்பட்சத்தில் தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரும் என தெரிகிறது. குறிப்பாக, விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி தளபதி 68 குறித்த சிறப்பு அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Thalapathy 68: லியோவை விட உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தளபதி 68... வெங்கட் பிரபு, யுவன் காம்போவில் விஜய்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News