ஏகே 61-க்கு மாஸா..கிளாஸா வந்திறங்கிய முக்கிய பிரபலம்
நடிகர் அஜித் மாஸாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஏகே 61 சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் மஞ்சுவாரியர்.
வலிமை திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் அஜித் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் திரைப்படம் ஏகே 61. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு வேடங்களில் நடிக்கும் நடிகர் அஜித், தன்னுடைய பெரும்பாலான காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 90 விழுக்காடு காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டதால், படப்பிடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் அவர்.
மேலும் படிக்க | ’சும்மா வதந்தியை கிளப்பாதீங்க’ பதறிபோய் புகைப்படம் வெளியிட்ட எஸ்பிபி சரண்
இந்த இடைவெளியில் மற்ற நடிகர் நடிகைகளை வைத்து இதர காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். சர்பாட்டா பரம்பரை வில்லன் கொகேன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லேட்டஸ்டாக இந்தப் படப்பிடிப்பில் இணைந்திருக்கார் நடிகை மஞ்சு வாரியர். ஏகே 61 படப்பிடிப்பு தளத்தில் அவர் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. மஞ்சுவாரியரின் சூட்டிங் என்டிரிக்கே அஜித் ரசிகர்கள் பையர் விடத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், ஆஜித் இப்போது கூலாக ஐரோப்பா நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கிறார். பைக்கிலேயே முக்கிய பகுதிகளுக்கு விசிட் அடிக்கும் அவர், விரைவில் அந்தப் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். ஏனென்றால், மஞ்சுவாரியர் படத்தில் இணைந்திருப்பதால், இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகள் இருக்கின்றன. அந்தக் காட்சிகளில் நடிப்பதற்காக அவர் வந்தாக வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அஜித்தும் ஐரோப்பிய பயணத்தை வேகமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார். ஏகே 61 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் பூனேவில் நடிக்க இருக்கிறதாம். அதற்கான செட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அஜித் போஸ் கொடுத்த காரின் விலை இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR