Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தியால் தான் பஞ்சாயத்து கூட்டும் அளவிற்கு வந்துவிட்டது என்று ரங்கநாயகி சக்தியை திட்டிவிட்டு பஞ்சாயத்தில் இருந்து வெளியேறுகிறாள்.  இதையடுத்து வீட்டுக்கு சென்று செல்வமுருகனிடம் சரண்யாவிற்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று, அசோக் அம்மா சொன்னதாக சொல்கிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!


 


அசோக் இங்கே வந்து போனதை நானே பார்த்திருக்கிறேன் என்று சொல்வமுருகன் செல்ல, அப்போது சத்தியும் அங்கே வர அசோக்கும் சரண்யாவும் சந்திக்கவில்லை என்று கோவிலில் வைத்து அசோக்கின் அம்மாவிடம் ஏன் சொன்னாய் என்று ரங்கநாயகி சக்தியை கேட்க, ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் சக்தி அப்படி சொல்லி இருப்பாள் என்று செல்லமுருகன் சொல்கிறார். ஆனாலும் கோவம் அடைந்த ரங்கநாயகி துப்பாக்கி எடுத்து வந்து சக்தியின் நெற்றியில் வைக்க அதை வெற்றி தடுத்து காப்பாற்ற, அந்த நேரத்தில் பூஜா கையில் தாலியுடன் கோபமாக வாசலில் வந்து நிற்கிறாள். 



சக்தி கர்ப்பம் இல்லை என்று தெரிந்துவிட்டது பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது இனி நீ போகலாம் என்று பூஜாவை செல்வமுருகன் சொல்கிறார். சக்தியும் பூஜாவை நீ இங்கிருந்து போய் விடு என்று சொல்ல அதற்கு பூஜா இது என் ரங்கநாயகி அத்தை வீடு நீ யார் போக சொல்வதற்க்கு என்று சொல்லி ரங்கநாயகியை கூப்பிட ரங்கநாயகி வருகிறாள். ரங்கநாயகியும் பூஜா நீ எங்கே இருக்க வேண்டாம் என்று சொல்ல, அதிர்ச்சியடைந்த பூஜா அங்கிருந்து கோபமாக செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.



முந்தைய எபிசோடில் ரங்கநாயகி சக்தியை கூப்பிட்டு தாலியை எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரச் சொல்ல சக்தி தாலியை எல்லோரிடமும் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறாள். பிறகு ரங்கநாயகி வெற்றியிடம் தாலியை கட்டுமாறு கூற, கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி தாலியுடன் இருக்க, திடீரென அங்கே வந்த சாந்தா கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கூறுகிறாள். சாந்தா, “இது சக்தியின் வாழ்க்கை அதை கெடுக்காதீர்கள்” என்று ஆவேசமாக சண்டையிட்டு பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 


மேலும் படிக்க | விஷாலே அரசியலுக்கு வரும் போது விஜய் வருவதற்கு என்ன?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ