மெஸ்ஸை இடிக்க வந்த புஷ்பா..வெற்றி வைத்த செக்மேட்- மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்..!
Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ரசிகர்களின் ஒன்றாக விளங்குவது மீனாட்சி பொண்ணுங்க. மக்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள திருப்பங்கள் என்னென்ன தெரியுமா?
முந்தைய எபிசாட்..
வெற்றியின் பெண்பார்க்கும் படலம், சக்தி அவனை வெறுப்பேற்றுவது, முதலிரவில் இருந்து தப்பிக்க சபரி மலைக்கு மாலை போடுவது என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் காமெடியாகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கிடையில் மீனாட்சி மெஸ்ஸிற்கு பிரச்சனை வருகிறது. இதனால் அவள் வெற்றியிடம் சென்று உதவி கேட்கிறாள். அவனோ மன்னிப்பு கேட்டால்தான் உதவுவேன் என கூறி அவளை கோபமடைய செய்கிறான். இதையடுத்து மீண்டும் மெஸ்ஸை இடிக்கும் முனைப்பில் ஜே.சி.பியுடன் சிலர் வருகின்றனர். இதையடுத்து என்ன நடந்தது? வெற்றி சக்திக்கு உதவினானா? எல்லா கேள்விகளுக்கும் இன்றைய எபிசோடில் விடை இருக்கிறது.
இன்றைய எபிசோட்:
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றியிடம் மன்னிப்பு கேட்க பார்க்க அதன் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் நான் சும்மாதான் சொன்னேன் என்று சொல்லிவிட்டு ஜேசிபியின் முன்னால் சென்று நிற்கிறான்.
இதனால் வெற்றியை இடித்து தள்ளிவிட்டு வீட்டை இடிக்க சொல்லி ஜெசிபியிலிருக்கும் நபருக்கு புஷ்பா கட்டளையிட, சங்கிலி ஓடிவந்து நம் வீட்டை இடிப்பதற்கு ஜே சி பி வந்திருக்கு என்ற தகவலை சொல்ல, புஷ்பா காரில் வீட்டுக்கு கிளம்பி போகிறாள்.
புஷ்பாவால் வரும் பிரச்சனை:
புஷ்பா அங்க செல்ல புஷ்பாவின் வக்கீல் அவர்கள் காட்டிய பத்திரத்தை படித்து விட்டேன் இந்த வீட்டை இடிப்பதற்கு அனைத்து உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது என்று கூறுகிறார்.
மீண்டும் டென்ஷனாக புஷ்பா மீனாட்சி வீட்டிற்கு வருகிறாள். அங்கு நீதிமணி கசாயம் குடித்த அன்று ஏதேதோ பேப்பரில் கையெடுத்து போட்டு விட்டேன் என்று கூறுகிறார். வெற்றி இந்த வீட்டில் ஒரு செங்கல் உடைந்தாலும் உங்கள் வீட்டையை தரைமட்டமாக்கி விடுவேன் என்று புஷ்பாவை எச்சரிக்கிறான். வேறு வழியல்லாமல் புஷ்பா சக்தியிடம் சரணடைந்து உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று எச்சரிக்கிறாள்.
ஆனால் சக்தி பூட்டிய மெஸ்சை புஷ்பாவையே திறக்க சொல்கிறாள். தூக்கி வீசிய பாத்திரங்கள் எல்லாம் அடியாட்களை வைத்து திரும்ப வைக்க சொல்கிறாள். சக்தி வெற்றிக்கு நன்றி கூறுகிறாள். ஆனால் வெற்றியோ இது என் கடமை எந்த பெண் பாதித்தாலும் நான் உதவி செய்வேன் மற்றபடி நமக்குள் இருக்கும் சண்டை அப்படியே இருக்கிறது என்று ஷாக் கொடுக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
நடிகர்-நடிகைகள்:
குடும்ப கதையாக எடுக்கப்பட்டுள்ள மீனாட்சி பொண்ணுங்க தொடரில், மீனாட்சியாக பிரபல நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். கதாநாயகன் வெற்றி கதாப்பாத்திரத்தில் ஆர்யன் நடித்துள்ளார். ரங்கநாயகியாக சசிலயா என்பவர் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | பக் பக் காட்சிகளுடன் திகில் நிறம்பிய போர் தொழில் டீஸர் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ