பெண் பார்க்க போன வெற்றி.. ஷக்தி வைத்த ட்விஸ்ட்- மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான சீரியல்களுள் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க. ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கும் இத்தொடர், மங்கைகள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்று நடக்கும் கதையை மையமாக கொண்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை என்னென்ன தெரியுமா?
முந்தைய எபிசோட்..
மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வந்திருக்க, வெற்றி வேண்டுமென்று தான் இப்படி செய்கிறான் என்ற முடிவுடன் சக்தி சங்கிலிக்கு போன் செய்கிறாள். அவனிடம் அன்று உன்னை வெற்றி மார்க்கெட்டில் அடித்து விட்டான் ஆனால் இப்போது வந்தால் நீ அவனை அடிக்கலாம் அவன் சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறான் என்று போட்டுக் கொடுக்கிறாள்.
உடனே சங்கிலி வெற்றியின் வீட்டிற்கு வந்து, வேண்டும் என்றே வெற்றியிடம் வம்பு சண்டை இழுக்கிறான். இதனால் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு கோபம் அதிகமாகிவிட வீட்டுக்குள் சென்று மாலையை கழற்றி பால் சொம்பில் போட்டுவிட்டு வந்து சங்கிலியை அடிக்கிறான்.
தரகரை அழைத்த வெற்றி..
சக்தியை வெறுப்பேற்றுவதற்காக வெற்றி ஒரு கல்யாண புரோக்கரை வர சொல்லி தனக்கு பெண் பார்க்க சொல்கிறான். சக்தி வெற்றியிடம் சண்டை போட அவன் நான் பூஜாவை தான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னேன் வேறு பெண்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே, என்று ஷாக் கொடுக்கிறான். மேலும் பெண் பார்க்க போவதற்காக தன் அறைக்கு சென்று புது டிரஸ் கூலிங் கிளாஸ் போட்டு தயாராாகிறான். வெற்றி பெண்பார்க்க சென்றானா? சக்தியின் ரியாக்ஷன் என்ன? இன்றைய எபிசோடில் பார்க்கலாம் வாங்க.
இன்றைய எபிசோட்..
மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் வெற்றி அழகான உடை உடுத்தி கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு நண்பர்களுடன் பெண் பார்க்க செல்கிறான். அவனுடன் சக்தியும் வருகிறேன் என்று சொல்ல அவன் வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். ஆனாலும் சக்தி கெஞ்சுகிறாள். இதனால் அவன் சக்தியையும் அழைத்து செல்கிறான்.
அடுத்து கோயிலில் ஒரு அழகான பெண் நின்று கொண்டிருக்க இவள் தான் கல்யாண புரோக்கர் சொன்ன பெண் என்று நினைத்து அவளிடம் பேச செல்ல அவள் கோபமடைந்து தன் கணவனை அழைக்க அந்த பெண்ணின் கணவன் வெற்றியை திட்டுகிறான். இதை பார்த்த சக்தி விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.
பெண்களை பின்தொடர்ந்த வெற்றி..
ஐந்தாறு பெண்கள் ஒரு இடத்தில் இருக்கிறார்கள். இதை பார்த்த வெற்றி, இவர்கள்தான் புரோக்கர் சொன்ன பெண்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான். அந்தப் பெண்களின் முன்னால் சென்று பார்க்க அனைவருமே வயது முதிர்ந்த கிழவிகளாக இருக்கிறார்கள். இதை பார்த்து வெற்றி டென்ஷன் ஆகிறான்.
அடுத்து வெற்றி சக்தியிடம் புரோக்கர் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்ல புரோக்கர் இல்லை நான் தான் இப்படி மாற்றிவிட்டேன் என்று வெற்றியிடம் சக்தி சொல்லி சிரிக்கிறாள். இறுதியாக ரங்கநாயகியின் வீட்டிற்கு அசோக் காரில் வந்து இறங்கி சரண்யாவை சந்தித்து அவளை காரில் அழைத்துச் செல்கிறான். எதிரே வெற்றியும் சக்தியும் வருகிறார்கள்.
காணத்தவறாதீர்கள்..
காமெடியாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்
மேலும் படிக்க | ‘பருத்திவீரன்’ புகழ் செவ்வாழை ராசு காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ