தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் நேற்று புடவை எடுக்க போயிருந்த இடத்தில் ஷக்தி வந்து நின்று ரங்கநாயகிக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, இன்றைய எபிசோடில் பூஜா, சக்தி சொன்ன புடவையே இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறாள். அந்த புடவையை பூஜா மேல் வைத்துப் பார்க்க ரங்கநாயகி முயலும்போது, சக்தி வந்து நிற்க, சக்தி மேல் ரங்கநாயகி வைத்துப் பார்க்கிறாள். ரங்கநாயகி அதிர்ச்சியாக, இதே போல் இந்த புடவையை நீங்களே எனக்கு சுமங்கலி பூஜை அன்னைக்கு வெச்சி கொடுப்பீங்க என்று ரங்கநாயகியிடம் சக்தி சவால் செய்கிறாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஜினி கோயிலில் நாககிரீடம் அமைத்து சிறப்பு வழிபாடு செய்த ரசிகர்....!


வீட்டுக்கு வரும் கேட்டரிங்க் காரனிடம் ரங்கநாயகி ஒரு மெனு கொடுக்க, அதை வெற்றி மாற்றுகிறான். பத்திரிகையை யாரு யாருக்கு அனுப்பவேண்டும் என்று ஒரு லிஸ்ட்டுடன் ரங்கநாயகி ரோஹித்திடம் சொல்ல, பத்திரிகையையும் அட்ரஸ் லிஸ்ட்டையும் சக்தி மாற்றுகிறாள். பேனர் டிசைனை ரங்கநாயகி செலக்ட் செய்ய, அதை வெற்றியும் சக்தியும் மாற்றுகிறார்கள். 



ஃபங்க்‌ஷன் ஆரம்பிக்கிறது. பவுன்ஸர்களை எல்லாம் வைத்து, சக்தி வரக் கூடாது என்று திட்டமிடும் பூஜா பவுன்ஸர்களிடம் ஒரு கவரில் போட்டோவை வைத்து, இதுல இருக்கிறவங்க யாரும் உள்ள வரக் கூடாது என்கிறாள். அந்த கவரில் இருக்கும் போட்டோவை வெற்றி மாற்றுகிறான். வெற்றிதான் முதலாளி என்பதால் வெற்றி சொல்வதை கேட்கிறார்கள் பவுன்ஸர்கள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ