மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர் அவதூறு கருத்துகளை பரப்பி வந்தார். அதனால் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு இருப்பதும் இவருக்கு புதியதல்ல. இந்த வரிசையில் பட்டியலின மக்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவர் தெரிவித்த அவதூறு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 


மேலும் படிக்க | Meera Mithun: நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு


இதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. 


இதனால் மீரா மிதுன் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதுடன் அவரை கைது செய்து ஏப்ரல் 4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். 


இந்நிலையில் நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவரை கைது செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். 


மேலும் படிக்க | Meera Mithun Arrest Latest News: ஜாமீன் கேட்டு கதறும் மீரா மிதுன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR