நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னையில் விலங்குகள் நல வாரியம் அவசர ஆலோசனையில் அப்படத்துக்கு தடையில்லா சான்று அளிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. 


இதனிடையே மெர்சல் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் அறிவிப்பு பின்னர் கடந்த 6-ம் தேதி அந்தத் தலைப்பை பயன்படுத்தத் தடை இல்லை என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது. 


இந்த படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மெர்சல் படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா கிராபிக்ஸ் என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரம் ஏதும் படக்குழுவினரால் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டது. இதனால் அந்த வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை.


இதையொட்டி நடிகர் விஜய் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து விலங்கு நல வாரியம் இன்று காலை அவசரமாக ஆலோசனை செய்தது.


அதோடு, படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சி தொடர்பான ஆவணங்களை படக்குழு சமர்பித்ததாக தெரிகிறது. இதையடுத்து, தடையில்லா சான்றிதழை விலங்கு நல வாரியம் அளித்துவிட்டதாக தெரிகிறது. மேலும், சில காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.


எனவே, தீபாவளியன்று மெர்சல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.