மோகன்லால நடிப்பில் சமீபத்தில் வெளியான “த்ரிஷ்யம் 2” படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. சூப்பர்ஹிட் மலையாள திரைப்படமான "த்ரிஷ்யம்" படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட  "த்ரிஷ்யம் -2" பற்றி பேசாத ஆளே இல்லை என்றே கூறலாம். இந்த படம் பிப்ரவரி 19 அன்று OTT தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. வெளியான நாளிலேயே இப்படம் ‘சூப்பர்ஹிட்’ அந்தஸ்தைப் பெற்று விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய ‘த்ரிஷ்யம்’ படம் வந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு ‘த்ரிஷ்யம் 2’ வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘திரிஷ்யம்’ படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. லாக்டௌனில் ‘த்ரிஷ்யம் 2’ படத்திற்கான கதையை எழுதிய படத்தின் இயக்குனர் ஜீது ஜோசஃப், லாக்டௌனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் படத்திற்கான படப்பிடிப்பை துவக்கினார். இந்த படத்திற்கு ஆன செலவு மற்றும் இது ஈட்டியுள்ள வருவாய் குறித்து தற்போது தகவல்கள் சில வந்துள்ளன.


த்ரிஷ்யம் 2 (Drishyam 2) படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மொத்த முதலீடு 20 கோடி என்று கூறப்படுகிறது. இதில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமும் அடங்கும். ஆண்டனி பெரம்பவூர் த்ரிஷ்யம் 2 படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஒரு காலத்தில் நடிகர் மோகன்லாலின் (Mohanlal) காரின் ஓட்டுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அமேசான் பிரைம் 25 கோடிக்கு வாங்கியது.


ALSO READ: நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்


இப்படத்தின் முந்தைய பகுதி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால், அதன் தொடர்ச்சியான ‘த்ரிஷ்யம் 2’ படத்தையும் அதே படக்குழுவுடன் இயக்குனர் எடுத்தார். ரசிகர்களிடையே இந்த படம் குறித்த பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தன.


த்ரிஷ்யம் படத்திற்கென பிரத்யேகமான ரசிகர் கூட்டம் உருவாகியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான ‘த்ரிஷ்யம் 2’ படத்தை OTT தளமான அமேசான் பிரைம் வீடியோ ஒரு பெரிய தொகைக்கு வாங்கியது.


ஆனால், இந்த படத்திற்கான லாபம் வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமல்ல. த்ரிஷ்யம் 2 படத்திற்கான சேட்டிலைட் உரிமை 15 கோடி ரூபாய்க்கு Asia Network கார்பரேஷனுக்கு, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப விற்கப்பட்டன. இதுவரை "த்ரிஷ்யம் 2" படம் ரூ .40 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. லாபக் கணக்கு இங்கே முடியவில்லை. இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமங்களுக்கான ஒப்பந்தங்கள் இன்னும் செய்யப்படவில்லை. அவை முடிந்தவுடன் இப்படத்தின் லாபம் இன்னும் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஏற்கனவே தெலுங்கிற்கான ரீமேக் உரிமங்கள் விற்கப்பட்டுள்ளன. பிற மொழிகளில் ரீமேக் உரிமங்களுக்கான விற்பனை இன்னும் நடக்கவில்லை. இந்த படத்தின் முந்தைய பகுதி கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, சீன மற்றும் சிங்கள மொழிகளில் ரீமேக்குக்காக விற்கப்பட்டது. இது ஒரு வகையான சாதனை பதிவாகும். ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் அப்படம் ஹிட் ஆனது. த்ரிஷ்யம் 2 படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்று தற்போது செய்திகள் வருகின்றன. எனினும், கன்னடத்தில் ரீமேக் செய்வது குறித்து இன்னும் எதுவும் தெரியவில்லை.


‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கிலும் கமல் (Kamalhasan) நடிப்பார் என்டும் சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு அது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: Super star ரஜினியின் திருமண நாள்: இன்ஸ்டாவில் அன்பு நிறைந்த வாழ்த்தை பகிர்ந்தார் ஐஸ்வர்யா தனுஷ்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR