கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் ஹீரோக்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். மிகவும் பரபரப்பாக செயல்படும் நடிகரான ஆர்யாவுக்கு நண்பர் கூட்டம் பல உண்டு. வரும் வாரங்களில் அவரது இரண்டு படங்களான 'டெடி' மற்றும் 'சர்பட்ட பரம்பரை' ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றன.
‘எனிமி’ படத்திற்கக தற்போது அவர் விஷாலுடன் படப்பிடில் உள்ளார். இந்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கவிருக்கும் பல படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜெர்மனியில் குடியேறிய விட்ஜா என்ற இலங்கை பெண் தமிழக அரசிடம் ஆர்யா (Actor Arya) மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கும் ஆவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
ALSO READ: நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்!
தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஆர்யா தன்னிடமிருந்து 70 லட்சம் 40 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிய படங்கள் எதிலும் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை மேற்கோள் காட்டி அவர் பணம் கேட்டதாக அந்த பெண் எழுதியுள்ளார்.
அவர் நடிகை ஆர்யாவை தொடர்பு கொண்டபோது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டது மட்டுமல்லாமல், தனது பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் தொலைபேசியில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றும் அந்த பெண் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னைப் போன்ற பல பெண்கள் நடிகர் ஆர்யாவிடம் ஏமாந்துள்ளதாகவும், ஆன்லைன் அரட்டைகள் மற்றும் பண பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும் விட்ஜா மேலும் கூறினார்.
எனினும், கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே ஆர்யா 2019 ஆம் ஆண்டிலேயே சாயீஷாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், அந்த நேரத்தில் 'சர்பட்ட பரம்பரை' படத்தை முடித்து 'எனிமி' படத்திலும் நடிக்க கையெழுத்திட்டதாகவும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் (Social Media) சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்த ஒரு படம் உட்பட குறைந்தது நான்கு பெரிய புதிய படங்களை (Films) நடிகர் ஆர்யா தற்போது கையில் வைத்திருக்கிறார்.
ஆகையால் இந்த பெண் கூறுபவற்றை முற்றிலுமாக நம்ப முடியாது என்று பலர் கூறி வருகின்றனர். அவர் கூறுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்பது பலரது கருத்தாக உள்ளது.
ALSO READ: ஜெயலலிதாவின் பிறந்தநாளில், “தலைவி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR