கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கெளதம் மேனன் எப்பொழுது தெரிவிப்பார் என்ற கேள்வி ரசகர்களின் மனதில் நெருடிக் கொண்டிருக்கின்றது. 


காரணம் இப்படத்தின் இசையமைப்பாளர் பெயரை "MR.X" என்று வைத்து ரசிகர்களின் மத்தியில் பெரும் suspense-னை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவன்.


முன்னதாக இப்படத்தில் வரும் ’மறு வார்த்தை பேசாதே’ பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதை அடுத்து அப்படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்று ஆவல் இன்னுமும் அதிகரித்தது. 


தற்போது வரை  இசையமைப்பாளர் யார் என்பது அறியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பமடைந்து வருகிறனர்.


இதனையடுத்து நேற்று இந்த suspense-னை உடைக்கும் வகையில் படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை குறித்து நாளை வெளியிடப்போவதாகவும், ‘மறு வார்த்தை’ பாடலின் மறுவி வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில் தற்போது படக்குழு ’Maruvaarthai - Restrung Version’ எனும் தலைப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. இசைக்குழுக்கள் தர்புக சிவா தலைமையில் இசையமைக்க பாடகர் சித் சித்தார்த் பாடலை பாடுகின்றார். இந்த வீடியோவில் வரும் தர்புக சிவா தான் இந்த 'Mr.X' என்பது இப்போது வெளியாகியுள்ளது!