மகேந்திர சிங் தோனிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், சென்னையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உடனான தொடர்பு காரணமாக அனைவரின் இதயங்களிலும் அவருக்கு தனி இடம் உண்டு. ஜூலை 10 அன்று, எம்.எஸ். தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் தங்களது முதல் தமிழ் தயாரிப்பு முயற்சியான 'எல்ஜிஎம்'  படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொட்டினான்.  இந்த நிகழ்வில், யோகி பாபு அவரை CSK க்கு ஒரு வீரராக எடுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.  இதற்கு தோனி கூறிய பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  ஜூலை 9 அன்று சென்னை விமான நிலையத்தில் தோனி மற்றும் சாக்ஷிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது . அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள் பலத்த ஆரவாரத்துடன் மலர் தூவி வரவேற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏன் தமிழில் முதல் படம் எடுத்தேன்? LGM டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தோனி!



'எல்ஜிஎம்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 10ம் தேதி சென்னை லீலா பேலஸில் நடந்தது. இந்த விழாவில் 'எல்ஜிஎம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் யோகி பாபு, எம்.எஸ்.தோனியிடம் தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அமர்த்துமாறு கேட்டுக் கொண்டார். இந்த கேள்விக்கு தோனி வேடிக்கையான பதிலை அளித்துள்ளார்.  அவர், "ராயுடு [அம்பதி] ஓய்வு பெற்றுவிட்டார். அதனால், சிஎஸ்கேயில் உங்களுக்கு இடம் உள்ளது. நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறீர்கள். நான் சொல்கிறேன், நீங்கள் விளையாட வேண்டும். அவர்கள் மிக வேகமாக பந்து வீசுகிறார்கள், உங்களை காயப்படுத்துவதற்காக மட்டுமே பந்து வீசுகிறார்கள்." என்று கூறியுள்ளார்.


மேலும் பேசிய தோனி, எனது முதல் டெஸ்ட் அறிமுகம் சென்னையில் தான் இருந்தது. என்னுடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் சென்னையில் தான், இப்போது என்னுடைய முதல் படம் தமிழில். சென்னை எனக்கு இன்னும் சிறப்பு. 2008ல் ஐபிஎல் தொடங்கிய போது நான் இங்கு தத்தெடுக்கப்பட்டேன். மாநிலத்தின் மீதான எங்கள் பரஸ்பர அன்பின் காரணமாக நாங்கள் எங்கள் முதல் திரைப்படத்தை தமிழில் தயாரித்தோம்.   LGM ஒரு நல்ல படம். நான் என் மகளுடன் கூட இதைப் பார்க்க முடியும், அவளுக்கு நிறைய கேள்விகள் இருந்தாலும், அவள் அதை ரசித்தாள். ஒரு பையன் தன் அம்மாவிற்கும் காதலிக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளை எப்படி கையாள்கிறார் என்பதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என்று கூறினார்.


'லெட்ஸ் கெட் மேரேட்' ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும், இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் . நதியா அம்மாவாக நடிக்க, யோகி பாபு மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி இப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | படம் எப்போது இயக்குவேன் தெரியுமா? சிவகார்த்திகேயன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ