முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) இருந்து விலகியுள்ளார். ஜூன் மாதம் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுடன் ஒப்பந்தம் செய்தார் அம்பதி ராயுடு. இது பலருக்கும் வியப்பாக இருந்த நிலையில், திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார் அவர்.
அம்பதி ராயுடு வாபஸ்
இந்தியாவில் உள்நாடு மற்றும் பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருக்கும் வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது. ஆனால் அனைத்து விதமான ஓய்வுக்குப் பிறகு, பிசிசிஐ உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்த பிறகு அவர்கள் எந்த நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடலாம். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அமெரிக்க லீக் அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர்ந்தார் அம்பத்தி ராயுடு. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்தபிறகு உடனடியாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஆயத்தமானார்.
மேலும் படிக்க | அவர் அமைதியானவர் இல்லை! தோனியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்!
ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்க லீக்கின் முதல் சீசனில் விளையாடமாட்டார் என டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. இந்த லீக் அமெரிக்காவில் ஜூலை 13 முதல் ஜூலை 30 வரை நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற ஐபிஎல் உரிமையாளர்களும் எம்எல்சி அணிகளை வாங்கியுள்ளனர்.
ஐபிஎல் 2023 இறுதி ஆட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023)-ன் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவின் ஐபிஎல் வாழ்க்கையின் கடைசி போட்டியாகும். இறுதிப் போட்டியில் அம்பதி ராயுடுவின் பேட்டிங்கில் அதிரடியாக ஆடினார். அவர் 8 பந்துகளில் 237.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 19 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசினார். இந்த போட்டிக்கு முன்னதாக ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வை அறிவித்தார்.
அம்பதி ராயுடுவின் ஐபிஎல் வாழ்க்கை
அம்பதி ராயுடு தனது ஐபிஎல் வாழ்க்கையை 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். அம்பதி ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அம்பதி ராயுடு ஐபிஎல்லில் 204 போட்டிகளில் 28.23 சராசரியில் 4348 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராயுடு 22 அரை சதங்களும், 1 சதமும் அடித்துள்ளார். அதே சமயம் 6 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் அம்பதி ராயுடு இடம் பிடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | Happy Birthday Dhoni: தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ