கன்னடத்தில் உருவான ‘மம்மி’ படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வெளியாகவுள்ளது. விஜய் இயக்கத்தில் உருவான ‘பட்டர்பிளை’ படத்திலும் அஜீத்தின் ‘வீரம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். படத்தில் கிறிஸ்துவ பாதிரியாராக ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும், அவரது 6 வயது மகளுக்கும் நடக்கும் சம்பவம்தான் இந்தப்படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உருவாகி உள்ளது. 


படத்திற்கு அஜனீஸ் லோகநாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தற்போது மம்மி என்ற பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.